இந்த வாரம் பிரித்தானிய அரசியலில் எதிர்பாராத திடீர்த் திருப்பங்கள். வெள்ளிக்கிழமையன்று முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக ராஜினாமாச் செய்து அவரது தொகுதியில் இடைத் தேர்தல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கினார். அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி துறந்தார்கள். இப்போதைக்கு மூன்று தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம். இது போதாதென்று முன்னாள் ஸ்காட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அவரது கட்சியின் நிதி மோசடிகள் தொடர்பாகப் போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்த முன்னாள் பிரமுகர்களின் சிக்கல்கள் தற்போது பதவியிலிருக்கும் பிரதமர் ரிஷி சுனக்கிற்கும் ஸ்காட்லாந்து முதலமைச்சர் ஹம்ஸா யூசஃபிற்கும் தலைவலி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
Add Comment