Home » 32 பேர் மாநாடு
தமிழ்நாடு

32 பேர் மாநாடு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டியில் ஏற்பாடு செய்திருந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எவருமே கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இது தமிழகம் முழுக்கப் பேசுபொருளாகி இருக்கிறது.

2021 செப்டம்பரில் தமிழக ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்தே அவருக்கும் தமிழக அரசை ஆண்டு வரும் திமுகவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைப்பது, தமிழகப் பல்கலைக்கழகங்களுக்குக் கௌரவ வேந்தராக இருப்பதால் அவற்றின் செயல்பாடுகளிலும், துணைவேந்தர் நியமனங்களிலும் தலையிடுவது போன்று ஆளுநரின் இடையூறுகள் பல வகைகளிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளில் ஆளுநர் காலவரையின்றி மசோதாக்களை அங்கீகரிக்காமல் வைத்திருக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாகத் தமிழக முதலமைச்சரை நியமிப்பதற்கான சட்டத்திருத்தம் உள்ளிட்ட பத்து மசோதாக்களும் அங்கீகரிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!