ஒரு குறிப்பிட்ட இனக் குழுவில் பிறந்த குழந்தைகள், நினைவறிந்த நாளாக அச்சத்திலும் கவலையிலுமே வளர்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? வாழ்வோமா என்பது அச்சத்தின் காரணம். நம்மாலும் பள்ளிக்குச் சென்று படிக்க முடியுமா, எல்லோரையும் போல கௌரவமான ஒரு வாழ்க்கை வாழ முடியுமா என்பது கவலை.
ரோஹிங்கியா இனக்குழுவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உண்மையிலேயே இந்த இரண்டு உணர்வுகளைத் தவிர வேறெந்த உணர்வும் பரிச்சயமில்லை. பிறந்தது முதலே இவர்கள் இப்படித்தான் என்றால், ஐயோ பிறந்துவிட்டதே என்பது இவர்களது பெற்றோரின் கவலை. குழந்தைகளின் பயத்தைப் போக்கும் வழி பெற்றோருக்கும் தெரியவில்லை. இவர்களுக்கு எப்படி உதவலாம் என்று ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு மையத்திற்கும் புரியவில்லை. ஐ.நாவின் கூற்றுப்படி, ரோஹிங்கியா முஸ்லிம்கள்தான் உலகின் மிகப்பெரிய நாடற்ற இனக்குழு.
யார் இந்த ரோஹிங்கியாக்கள்?
Add Comment