Home » ஆர்.எஸ். மனோகர்: சரித்திரம் படைத்த புராண நாயகன்
கலை

ஆர்.எஸ். மனோகர்: சரித்திரம் படைத்த புராண நாயகன்

ஆர். எஸ். மனோகர்

தனது சமூக, வரலாற்று மற்றும் புராண நாடகங்கள் மூலம் நமது வளமான கலாசாரப் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். மேடையிலேயே வாண வேடிக்கைகள், போர்க்களங்கள், தந்திரக் காட்சிகளை நிகழ்த்திக் காட்டி, பார்வையாளர்களுக்குப் பிரமிப்பூட்டும் நாடக அனுபவங்களை வழங்கியவர். 1925ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி பிறந்த ராசிபுரம் சுப்ரமணியன் ஐயர் மனோகர் (எ) ஆர். எஸ். மனோகருக்கு இது நூற்றாண்டு கொண்டாடும் தருணம்.

சுப்ரமணியன் ஐயர்-ராஜலட்சுமி தம்பதியினருக்கு ராசிபுரத்தில் மகனாகப் பிறந்த லட்சுமி நரசிம்மன், தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால் ‘மனோகர்’ என்னும் பெயர் பெற்றார். அவருடைய தந்தை அஞ்சல் துறையில் மாற்றத்தக்க வேலையில் இருந்ததால், தனது ஆரம்பக் கல்வியை நாமக்கல், பெல்லாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயின்றார். பச்சையப்பா கல்லூரியில் சமஸ்கிருதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர், இம்பீரியல் புகையிலை நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு அஞ்சல் துறையில் சேர்ந்தார்.

அவர் தூர்தர்ஷனுக்குக் கொடுத்த பேட்டியில் தனது வாழ்க்கைப் பயணத்தை இவ்வாறு விவரித்துள்ளார். ‘300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், இரு வல்லவர்கள், வல்லவனுக்கு வல்லவன், பல்லாண்டு வாழ்க, அரச கட்டளை, அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், சொர்க்கம் போன்ற படங்கள் என்னால் மறக்க முடியாதவை. 1954இல் நேஷனல் தியேட்டர்ஸைத் தொடங்கி, 31 நாடகங்களை இயக்கி 8,000 நாடகங்களை மேடையேற்றினேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!