Home » ஐயப்பன் சொத்து ஆட்சி நாசம்!
வழக்கு

ஐயப்பன் சொத்து ஆட்சி நாசம்!

​சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை (ED) கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்திவரும் நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறையும் களமிறங்கியுள்ளது.

​1998ஆம் ஆண்டு, தொழிலதிபர் விஜய் மால்யா, சபரிமலை கோயிலின் கருவறையைத் தங்கமயமாக்க 30.3 கிலோ 22 கேரட் சுவிஸ் தங்கமும் (Swiss Gold), 1,900 கிலோ தாமிரமும் காணிக்கையாக வழங்கினார். இவை கவசங்களாக மாற்றப்பட்டு, சந்நிதானத்திலுள்ள துவாரபாலகர் சிலைகள், கதவுகள், சட்டங்கள், தூண்கள் மற்றும் மேற்கூரைகளில் பொருத்தப்பட்டன. இதுதவிர, பக்தர்கள் வழங்கிய தங்கக் காணிக்கைகளும் கொடிமரம் உள்படக் கோயிலின் பல்வேறு பகுதிகளில் கவசங்களாகப் பொருத்தப்பட்டுள்ளன.

​2019ஆம் ஆண்டு, பெங்களூரு தொழிலதிபரான உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவர், தங்கக் கவசங்களைப் புதுப்பிக்கும் திருப்பணியைத் தன் சொந்தச் செலவில் செய்து தருவதாகத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டை அணுகினார். தேவஸ்வம் போர்டும் வழக்கமான நடைமுறைகளைத் தளர்த்தி, எந்தவொரு டெண்டரும் அறிவிக்காமல் இவருக்குத் தங்கக் கவசங்களைப் புதுப்பிக்கும் அனுமதியை வழங்கியது. இவர் முன்பு சபரிமலை கோயிலில் பரிகர்மியாக (உதவி அர்ச்சகர்) இருந்தவர். அவருக்குக் கோயிலுக்கு உள்ளே இருந்த தொடர்புகளும், வெளியிலிருந்த உயர்மட்டத் தொடர்புகளும் இந்த அனுமதியைப் பெற உதவின.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!