Home » சலம் – 88
சலம் நாள்தோறும்

சலம் – 88

88. சிக்‌ஷாவல்லி

வெளி இருண்டிருந்தது. குளிர் சற்று அதிகமாக உள்ளதாக சாரன் சொன்னான். அப்படியா என்று கேட்டேன். அவன் புன்னகையுடன் என்னையே சில கணப் பொழுதுகள் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘என்ன?’

‘உணர்ச்சிகள் இல்லாத நீ ஒரு பிணத்துக்குச் சமம் என்று பல சமயம் நினைப்பேன். ஆனால் சகிக்க முடியாத இந்தக் குளிர்ச்சியை அப்படியா என்று உன்னால் கேட்க முடிகிறது பார். இதனைக் காட்டிலும் பெரிய வரம் பெற்ற இன்னொருவன் இருக்க முடியாது என்று இப்போது தோன்றுகிறது.’

நான் அவனை என் அருகே நெருக்கமாக வந்து அமரும்படிச் சொன்னேன். எதற்கு என்று கேட்டான்.

‘பெரிய காரணமெல்லாம் ஒன்றுமில்லை சாரனே. யாருக்கும் இதுவரை சொல்லாத ஒன்றை உனக்குச் சொல்லலாம் என்று தோன்றியது.’

இப்போது அவன் நெருங்கி வந்து அமர்ந்து, ‘சொல்’ என்றான்.

‘நீ என்னிடம் ஒரு வரம் கேட்டாய்.’

‘ஆம்.’

‘உடனே நான் அதனை உனக்கு அளித்துவிட்டேன்.’

‘ஆம்.’

‘தவத்தின் மூலம் நான் சேமித்த சக்தி அதனைச் சாதித்துத் தரும் என்ற நம்பிக்கையில் அதனை உனக்கு வழங்கினேன்.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!