மென்பொருள்களும் டிஜிட்டல் சேவைகளும் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கங்களாக மாறியுள்ளன. லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன்களில் உற்பத்தியாளரால் நிறுவப்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் சில அடிப்படையான செயலிகளுடன் (Built-In-Apps), தேவைக்கேற்பச் சில மென்பொருள்களையும் டிஜிட்டல் சேவைகளையும் பணம் கொடுத்து வாங்கும் நடைமுறை உள்ளது.
வணிகரீதியாக இயங்கும் நிறுவனங்கள்தான் முன்பு மென்பொருள்களையும் டிஜிட்டல் சேவைகளையும் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தன. கடந்த சில ஆண்டுகளாகச் சாதாரண மக்களும் இதில் பணம் செலவிடுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மென்பொருள் சில்லறை விற்பனைச் சந்தையின் (Software Retail Market) மதிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இது 2031ஆம் ஆண்டுக்குள் 42 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் பெரும்பாலான மென்பொருள்கள் ஓப்பன் சோர்ஸ் லைசன்ஸில் இலவசமாகக் கிடைக்கின்றன என்றாலும், அவற்றை ஏன் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? மேம்படுத்தப்பட்ட பயனர் அனுபவம் (User Experience) மற்றும் சேவை ஒப்பந்தம் (Service Level Agreement) ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.















Add Comment