Home » சண்டைக் களம் – 11
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 11

2. கிளாடியேட்டர்

ரோமானியப் பேரரசில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிளாடியேட்டர் போட்டிகள் முதன்முதலாக நடத்தப்பட்டன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் கிளாடியேட்டர்கள் ரோமானிய மண்ணில் ரத்தம் சிந்தி மக்களை மகிழ்வித்தனர்.

மூதாதையருக்கு அஞ்சலி செலுத்துவதன் ஒரு பகுதியாக இருந்த கிளாடியேட்டர் போட்டிகள் ஆண்டுகள் செல்லச் செல்ல ரோமானிய அரசின் கேளிக்கையில் ஒன்றாகவும், பெரும் பணப்புழக்கம் இருந்த போட்டியாகவும் உருவெடுத்தது. முன்னோர்களின் நினைவாக ரத்தம் சிந்தவும், மூதாதையரைக் கொண்டாடவும் மக்கள் நடத்திய போட்டிகள், நாள்கள் செல்லச்செல்ல, போட்டிக்கெனத் தனிப் பயிற்சி பெற்று, வீரர்கள் எஜமானர்களின் அடிமைகளாக வாழ்ந்து, விளையாட்டுத் திடலில் வெற்றி அல்லது மரணம் அடையும் கிளாடியேட்டர் விளையாட்டாக மாறியது. ரோமின் ‘கொலொசீயம்’ விளையாட்டரங்கில் தங்கள் வீரத்தைக் காட்டுவது பல கிளாடியேட்டர்களின் கனவாக இருந்தது.

பார்வையாளர்களின் முன்னால் சண்டையிடுவதற்காகவே பயிற்சி பெற்று, வெற்றி அல்லது மரணம் இந்த இரண்டில் ஏதோ ஒன்றுக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள் கிளாடியேட்டர்கள். கிளாடியஸ் என்றால் ரோமானிய வாள். கிளாடியஸில் இருந்து கிளாடியேட்டர். வாள்வீரன் என்னும் பொதுப்பெயர் இருப்பினும் எல்லா கிளாடியேட்டர்களும் வாள் வீரர்கள் மட்டுமல்லர். ஏந்தியிருக்கும் ஆயுதம், அணிகின்ற கவசம், கையில் வைத்திருக்கும் கேடயம் இவற்றிற்கு ஏற்ப இருபதுக்கும் மேற்பட்ட கிளாடியேட்டர் பிரிவுகள் இருந்தன. மேலும், வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்த வீரர்களை அவர்கள் களத்துக்கு அணிந்து வந்த ஆடைகளிலிருந்தும் அவர்களுடைய நிலத்தை அடையாளம் கண்டனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்