Home » ஆட்சிக்கு டாட்டா; கணவருக்கு பைபை!
உலகம்

ஆட்சிக்கு டாட்டா; கணவருக்கு பைபை!

சன்னா மரீன்

சன்னா மரின், பின்லாந்து பிரதமர். மிக இளம் வயதில் இப்பதவிக்கு வந்தவர். உலகின் இளைய தலைவர் என்ற பெருமை பெற்றவர். இளம் தலைவர் என்றால் அறுபது வயதில் நம்மூர் இளைஞர் அணித் தலைவர் போல் கற்பனை செய்துகொள்ளக் கூடாது. 1985-இல் பிறந்தவர். 2019இல் அதாவது முப்பத்து நான்கு வயதில் பின்லாந்தின் பிரதமர் பதவியை ஏற்றவர்.

பாராட்டுகளையும் சர்ச்சைகளையும் பேதமின்றிச் சமமாக பாவிப்பவர். எனவே இரண்டும் அவர் முகவரியை மாறி மாறித் தட்டின. தற்போது இவரின் பதவிக்காலம் முடியப் போகிறது. கூடவே மண வாழ்க்கையையும் முடிவிற்குக் கொண்டுவருகிறார். ஆம் தொழிலதிபரும் விளையாட்டு வீரருமான தன் கணவரை விவாகரத்துச் செய்ய உள்ளார்.

எப்போதும் பதவியால் பரபரப்பாகப் பேசப்பட்டவர். பதவி முடியும் காலத்தில் குடும்ப வாழ்க்கையையும் பேசுங்கள் என தலைப்புக் கொடுத்திருக்கிறார் ஊர் வாய்க்கு. இத்தம்பதிகள் பத்தொன்பது ஆண்டுகள் ஒன்றாக இருந்ததற்காகவும் தங்கள் அன்பு மகளுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றும் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் இன்ட்டா ஸ்டோரியில் இன்னும் நாங்கள் சிறந்த நண்பர்கள்தான் எனக் குறிப்பிட்டுள்ளார். பத்தொன்பது ஆண்டுகள் திருமண வாழ்க்கை என நினைத்து சன்னாவைப் பாட்டியாக நினைக்கக் கூடாது. அவர்கள் கட்சியில் இருந்த காலத்திலிருந்தே சிறந்த நண்பர்கள். 2020-இல்தான் மார்கஸ் ரைக்கோனனை திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் சோசியல் டெமாக்ரடிக் கட்சிக்கு தலைவராகவும் ஆனார். ஐந்து கட்சிகளின் கூட்டணிக்கும் தலைமை தாங்கினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!