‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்றொரு பாடல் உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும்.? நிச்சயமாகவே நம்மை நாம் அறிந்துகொள்ளுதல் அல்லது சுய விழிப்புணர்வு கொள்ளுதல் மிக முக்கியமானது. நமக்கே நம்மைத் தெரியாதா என அலட்சியப்படுத்தி விடக்கூடிய திறனில்லை. படிக்கிறபோதே உங்களுக்குப் புரிய வரும் நாம் நம்முடைய திறன்கள், பலவீனங்கள் ஆகியவற்றைச் சரியாக அறிந்து கொண்டிருக்கவில்லை என்பது.
நம்முடைய திறன்கள் என்ன, பலவீனங்கள் என்ன என எல்லாவற்றையும் முழுமையாக அறிந்தால்தான் நமக்கு முடியாத செயல்களை அந்தத் திறன் படைத்தவரிடம் ஒப்படைக்க முடியும். காரியங்களும் கனகச்சிதமாக முடியும்.
நம்மையறிந்து செயல்படும் போது எல்லா நாளும் நல்ல நாளாகும். காரியங்களைச் சிதறாமல் முடிக்கும் போது வரும் மகிழ்ச்சி அளவற்றது. தன்னை உணர்ந்து கொண்டவர்கள், நல்ல உறவுகளைப் பேணுவதோடு, நல்ல தன்னம்பிக்கை உடையவர்களாகவும் உருமாறுவதாக உளவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அப்படித் தன்னம்பிக்கை வரும் போது மனத் தைரியமும் வரும். இவை நம் காரியங்களை நேர்த்தியுடன் முடிக்க அவசியம். ஒரு நாளை நல்ல தன்னம்பிக்கையுடனும் அதனால் வரும் மிடுக்குடனும் ஆரம்பிக்கும்போது எத்தனை மகிழ்வாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
Add Comment