“அலுவலகங்களில் எனது படங்களை வைக்க வேண்டாம். நான் கடவுளோ, சின்னமோ அல்ல; மக்களின் ஊழியன் மட்டுமே. மாறாக, உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை வையுங்கள், அவர்கள் என்னை விடச் சிறந்தவர்களாக வளர வேண்டும்!”
இது செனகலின் புதிய ஜனாதிபதி பஸ்சிரோ டியோமயே ஃபே (Bassirou Diomaye Faye), தனது நாட்டு மக்களுக்குச் சொன்னது. இப்படி ஓர் அரசியல்வாதியா என்று பரவசத்தில் திக்குமுட்டாடி நிற்கிறார்கள் செனகல் மக்கள்.
செனகலெல்லாம் செய்தியில் வர இப்படி ஏதாவது நடந்தால்தான் உண்டு என்பது ஒரு புறம் இருக்க, யார் இந்த பஸ்சிரோ டியோமயே ஃபே?
ஒரு தலைவரின் எழுச்சியைப் புரிந்துகொள்ள, அவர் உருவாகிய சூழலை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
செனெகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மேற்கு ஆப்பிரிக்க நாடு. நதியின் பெயர்தான் நாட்டுக்கும். கலாசாரம், ம்பாலாக்ஸ் இசை, உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர் சாடியோ மாணே மற்றும் சில அரசியல் இயக்கங்களால் செனகல் அவ்வப்போது நினைவுகூரப்படுகிற நாடு.
Add Comment