Home » செயற்கை உரத்தில் சிக்காத சிக்கிம்
விவசாயம்

செயற்கை உரத்தில் சிக்காத சிக்கிம்

சிக்கிம் இந்தியாவின் இருபத்திரண்டாவது மாநிலமாக இணைந்து ஐம்பது ஆண்டுகள் கடந்திருக்கின்றன.1975 ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி இந்தியாவின் ஓர் அங்கமாக சிக்கிம் இணைந்தது. சம்பி பள்ளத்தாக்கையும் டார்ஜிலிங்கையும் தன் வசம் வைத்திருந்த சிக்கிமை நம்கியால் என்ற மன்னரின் குடும்பம் 1975ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தது.

சிக்கிம் இன்றைக்கு இருக்கும் அளவிற்கு சுருங்கிப்போனதன் பின்னணியில் வரலாற்று காரணங்கள் இருக்கின்றன. நேபாள், திபெத், பூட்டான் பிராந்தியங்களில் தொடர்ந்து நடைபெற்ற மோதல்களின் விளைவாகவே சிக்கிம் சுருங்கிப்போனது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நுழைந்த நாள் முதல் அவர்கள் இந்தியாவை இமாலயத்தின் எல்லை வரைக்குமே நிர்ணயித்து வைத்திருந்தனர். அகண்ட பாரதம் என்னும் கனவைப் போன்றது அது. ஆனால் நேபாள் யாருடனும் இணையாமல் தனித்திருக்கும் முடிவை அப்போது எடுத்திருந்தது. அதுவே நேபாள் மீதான ஆங்கிலேயப் படைகளின் தாக்குதலுக்கும் காரணமானது.

1814ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியோடு கைகோத்ததன் மூலமாக நேபாளோடு சேர விரும்பாத நிலைப்பாட்டை சிக்கிம் தெளிவாக உலகுக்கு உணர்த்தியது. இதன் மூலமாக நேபாள் கைப்பற்றி வைத்திருந்த சிக்கிமின் சில நிலப்பகுதிகளும் மீட்கப்பட்டன. 1861ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தும்லாங் உடன்படிக்கையின்படி சிக்கிம் பிரிட்டிஷ் ஆட்சியின் ஓர் அங்கமாக இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!