அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிலிக்கன் வேலி வங்கி இந்த மாதம் மூடப்பட்டது குறித்து வெளிவரும் செய்திகளைப் படித்திருப்பீர்கள். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வங்கி வெளியிட்டிருந்த இருப்பு நிலைக்குறிப்பின்படி (Balance Sheet) இந்த வங்கியின் சொத்து மதிப்பு இருநூறு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக இருந்தது. அமெரிக்காவின் பதினாறாவது பெரிய வங்கி என்று அறியப்பட்ட, நல்ல நிலையில் இருந்த ஒரு வங்கி எப்படி சில நாட்களுக்குள் இழுத்து மூடப்பட வேண்டிய நிலைக்கு வந்தது என்பது நம்மில் பலருக்கும் ஒரு கேள்வியாக இருக்கலாம். இது குறித்து அறிந்து கொள்ள வங்கிகள் செயல்பாடு பற்றி ஓர் அறிமுகம் தேவை.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment