அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிலிக்கன் வேலி வங்கி இந்த மாதம் மூடப்பட்டது குறித்து வெளிவரும் செய்திகளைப் படித்திருப்பீர்கள். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வங்கி வெளியிட்டிருந்த இருப்பு நிலைக்குறிப்பின்படி (Balance Sheet) இந்த வங்கியின் சொத்து மதிப்பு இருநூறு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக இருந்தது. அமெரிக்காவின் பதினாறாவது பெரிய வங்கி என்று அறியப்பட்ட, நல்ல நிலையில் இருந்த ஒரு வங்கி எப்படி சில நாட்களுக்குள் இழுத்து மூடப்பட வேண்டிய நிலைக்கு வந்தது என்பது நம்மில் பலருக்கும் ஒரு கேள்வியாக இருக்கலாம். இது குறித்து அறிந்து கொள்ள வங்கிகள் செயல்பாடு பற்றி ஓர் அறிமுகம் தேவை.
இதைப் படித்தீர்களா?
லண்டனின் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் 2001ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தது அந்த வழக்கு. விசாரணைக் கூண்டில் அறுபத்தொரு வயது மனிதர் நின்றிருந்தார். அவர்...
உலகம் முழுவதும் ஒருவர் எந்த நாட்டில், எந்த மொழியில், இலக்கியம், வணிகம் என்று எப்படிப்பட்ட நூல்களை எழுதுகிற எழுத்தாளராக இருந்தாலும் சரி, அவருக்கு...














Add Comment