Home » சாத்தானின் கடவுள் – 24
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 24

24. ஒளியிலே தெரிவது 

வள்ளலார் 1823 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரது தாயார், அவரது தந்தைக்கு ஆறாவது மனைவி. முதல் ஐந்து பேரும் பிரசவ காலத்தில் இறந்திருக்கிறார்கள். அந்தக் கணக்கை நேர் செய்வது போல, ஆறாவதாக மணந்த பெண்ணுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்திருக்கின்றன. வள்ளலார், ஐந்தாவது.

குழந்தை பிறந்த ஐந்தாம் மாதம் அவர்கள் குல வழக்கப்படி பெற்றோர் தம் புதிய குழந்தையுடன் சிதம்பரம் நடராசப் பெருமானை தரிசிக்கச் சென்றிருக்கிறார்கள். சந்நிதியில் தரிசனம் முடிந்ததும், அம்பல தரிசனம். திரை விலக்கி, தீபாராதனை. கூடியிருந்த அனைவரும் கும்பிட்டுவிட்டுச் செல்ல, தாயின் தோளில் இருந்த ஐந்து மாதக் குழந்தைக்கு அம்பலத்தின் அடிப்படை புலப்படுகிறது. கவனிக்கவும். அப்போதே அவர் ஞானமடைந்துவிடவில்லை. ஆனால் அவரது வழி எதுவென்ற தெளிவு வந்துவிடுகிறது.

இதனால்தான் அவர் பேசத் தொடங்கிய நாள் முதலே பேச்சினும் மௌனத்தை விரும்பியிருக்கிறார். ஓடித் திரிய வேண்டிய வயதுகளில் கோயில்களுக்குச் சென்று உட்கார்ந்திருக்கிறார். வீட்டார் வற்புறுத்தலால் திருமணம் நடந்தபோதும் இல்லற வாழ்வில் ஈடுபடாதிருந்திருக்கிறார் (‘தொட்டனன் அன்றிக் கலப்பிலேன்’). புத்தருக்கும் சிறு வயதில் அப்படி ஏதாவது நிகழ்ந்திருக்கலாம். ஒரு கல் தடுக்கி ஞானம் வருவதல்ல பெரிது. ஒரு கல் தடுக்கவிருப்பதைக் குறிப்பாலேனும் உணர்வது மிகப் பெரிது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Ramanan V says:

    இவ்வத்தியாயம் வள்ளலாரின் சுருக்கமான சரித்திரத்தைச் சொல்லி விட்டது. அருமை சார்.

  • R. Ilandjezian says:

    அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
    சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
    இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
    உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே. (திருவருட்பா 6 திருமுறை)

Click here to post a comment

இந்த இதழில்