Home » இலங்கைத் தேர்தல் இறுதிச் சுற்று
உலகம்

இலங்கைத் தேர்தல் இறுதிச் சுற்று

எதிர்பார்ப்பில் மக்கள்

இலங்கை தேர்தலில் கடைசி வாரம் அமர்க்களமாய் ஆரம்பமாகி இருக்கிறது. கொதிக்கிற கேத்தல் தண்ணீரைக் காலில் கொட்டிக் கொண்டதுபோல அலறிக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கின்றார்கள் பிரதான வேட்பாளர்கள்.

செப்டம்பர் 21ம் தேதி சனிக்கிழமை நடக்க இருக்கும் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலிற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் சரித்திரத்தில் சிங்கள அரசியல்வாதிகளாலோ அல்லது பவுத்த மதகுருக்களாலோ சிறுபான்மையினருக்கு எதிராக எந்தவித விஷமப் பிரசாரமும் நடக்காத தேர்தல் என்று இதற்கு அலங்காரம் சூடிக் கொள்ளலாம். அதற்குப் பதிலாக மொத்த இனவாதத்தையும், இட்டுக்கட்டல்களையும், பிரிவினைவாதத்தையும் இம்முறை சிறுபான்மைத் தலைவர்களே தம் வாக்கு வங்கிக்காகப் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிங்களத் தரப்பின் இம்மாற்றத்திற்கான காரணம், தெரிந்ததுதான். பொருளாதார மீட்பு தான் இன்று அவர்களுக்குத் தேவை. அத்தியாவசியங்களுக்கு வரிசையை ஏற்படுத்தி அகோர வயிற்றுப் பசியை ஏற்படுத்திய ராஜபக்சேக்களை அவர்கள் இன்னமும் மறக்கவில்லை. ராஜபக்சேக்கள் தயவில் ஜனாதிபதியாகிக் கொண்ட ரணில் செய்த வித்தைகளையும் ரசிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீதும் பெரிதாய் நம்பிக்கை ஏதுமில்லை. இவர்கள் எல்லாம் மக்கள் வரிப்பணத்தைச் சாப்பிட்டுக் கொண்டு நாடாளும் பொழுதுபோக்கில் ஈடுபட்டு இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். இதனால் தான் அவர்கள் ‘இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை’ என்று முடிவுடன் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்திப் பக்கம் திரும்பி இருக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்