கொழும்புச் சீமைக்கும் சிங்காரச் சென்னைக்கும் இடையில் தூரம் என்னவோ அறூநூற்றைம்பது கிலோ மீற்றர்கள்தான். ஆனால் இடை நடுவில் ஆர்ப்பரிக்கும் கடலைத் தாண்டிப் போக வேண்டியிருப்பதால் பயணம் எப்போதுமே காஸ்ட்லியானது. இத்தனை காலமும் இந்த இரு புள்ளிகளுக்குமிடையில் கள்ளத்தோணி தவிர்த்து, ஆகாய மார்க்கம் ஒன்றில் மட்டுமே போக்குவரத்து வசதி இருந்து வந்தது. விதவிதமான எயார்லைன்ஸ் சேவைகளில் அவரவர் தேவைக்கேற்றபடி கட்டணம் செலுத்தி ஒன்றரை மணித் தியாலங்களுக்குள் இமிக்ரேஷன் சம்பிரதாயங்களையும் முடித்துப் போய்ச் சேரலாம். பயணத்தின் போது சாதாரணப் பயணி ஒருவர் தம் எடை போக, அதிகபட்சம் முப்பது கிலோ பொருள்களைச் சுமக்கலாம். விமானச் சேவைகளின் வழமையான கெடுபிடிகளும் உள்ளடங்கலாக இருக்கையின் சூடு தணிவதற்குள் பயணம் முடிந்துவிடும். கட்டிய பணத்திற்குத் தரும் ஒருவேளை உணவைக்கூட ரசித்துச் சாப்பிட போதியளவு நேர அவகாசம் கிடைக்காது.
இதைப் படித்தீர்களா?
நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.
கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.















Add Comment