“என் பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டும். நோட்டீஸ் வந்திருக்கிறது. அது பாட்டுக்கு இருக்கட்டும். அதற்காக அவர்களைப் பள்ளியை விட்டு நிறுத்தப் போவதில்லை. எங்களுக்குத் தல தோனியைப் பார்க்க வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு சி.எஸ்.கே.தான் எல்லாம். அதனால்தான் குடும்பத்துடன் ஐ.பி.எல். பார்க்க வந்துவிட்டோம். செலவுதான். ஆனால் இந்த அனுபவம் திரும்பக் கிடைக்குமா..? அதற்குமுன் இந்த எழுபதாயிரம் ரூபாய் ஒன்றுமே இல்லை”. பெங்களூரிலிருந்து மேட்ச் பார்ப்பதற்குச் சென்னை வந்த ஒரு குடும்பத் தலைவரின் வார்த்தை இது.
“ஐ.பி.எல் ஆரம்பிச்சதும் ஒரு மாதச் சம்பளம் ஒதுக்கி வெச்சுட்டேன். அகமதாபாத்ல அவ்வளவு பெரிய ஸ்டேடியத்துல தோனி ஆட்டத்தைப் பார்க்கறதைவிட வேற என்ன வேணும்.? அவர் பேட்டிங் வர்லன்னா என்ன, கீப்பிங் பண்ணித் தான ஆகணும்.? அது போதும் பாஸ்.” ஒரு சென்னை இளைஞரின் வாக்குமூலம் இது.
“நாநூறு மில்லியன் டாலர் பணத்தை வைத்து என் வாழ்க்கைத் தரத்தை மாற்ற முடியுமா..? நிச்சயம் மாறாது. இப்போது என்னிடம் உள்ள பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுதும் இதேபோல என்னால் வாழ முடியும். நான் பணத்துக்காக இந்த விளையாட்டில் இல்லை. எனக்குப் புகழ், கௌரவம் இதெல்லாம் முக்கியம். விளையாட்டின் மிகப்பெரிய வீரர்களுடன் மட்டுமே விளையாட விருப்பம். பி.ஜி.ஏ. போட்டிகள் எனக்கு அந்த வாய்ப்பைத் தருகின்றன. இவ்வளவு பணம் தருகிறார்கள் என்பதற்காக ஒரு தனியார் போட்டியில் விளையாட எனக்கு விருப்பம் இல்லை”.
Add Comment