2018ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்றதில் இருந்து ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுன)க்கு ஒரு அசகாய நம்பிக்கை வந்தது போல இருந்தது. அவர்களது தொண்டர்கள் எல்லாம் தினமும் இந்த வெற்றியைப் பற்றியே பிரஸ்தாபித்தார்கள். பாகிஸ்தானில் இருபெரும் கட்சிகளையும் புறம் தள்ளிவிட்டு இம்ரான் கானுக்குச் சாத்தியமான வெற்றி ஏன் நமக்கு கைவரவில்லை என்றே விவாதங்கள் அமைந்தன.
நவாஸ் ஷெரீபும் ஆஸிப் அல் சர்தாரியும் பூட்டோவும், இவர்களுக்கு எல்லாம் களைப்பு வந்த போது முஷாரபும் பாகிஸ்தானைப் பிய்த்து தின்ற மாதிரி அல்ல இலங்கை நிலவரம். இவர்கள் அத்தனை பேரும் பாகிஸ்தானில் உட்கார்ந்து சாப்பிட்டு ஏப்பம் விட்டதை ராஜபக்ச குடும்பம் இங்கே ஒரே தவணையில் செய்தது நிஜம். ரணில், மைத்திரிபால சிரிசேனாவின் ஆட்சி தந்த நம்பிக்கையீனமும், பொறுப்பற்ற நிர்வாகமும் ஏற்படுத்திய அவலங்கள் நிஜம்.
Add Comment