இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஜூரம், கொளுத்தும் சித்திரை வெயிலையும் தாண்டி மெதுமெதுவாய்ப் பொதுமக்கள் மத்தியில் படர்ந்து கொண்டிருக்கிறது. பெரும் பொருளாதார மந்தத்திற்குப் பிறகு நடக்கும் மக்கள் வாக்கெடுப்பு என்பதாலும், வழக்கமான இலங்கைத் தேர்தல்களுக்குரிய கல்யாண குணங்களான இனவாதமும், மதவாதமும் ராஜபக்சேக்களின் கட்டிலுக்குக் கீழே இம்முறை ஒளிந்து கொண்டுவிட்டதாலும் இத்தேர்தல் அதீத முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
லட்சக்கணக்கான பெறுமதி கொண்ட வீடியோ கமெரா சகிதம் மாஸ் மீடியாப் பேர்வழிகள் முதல், யூடியூப் புரட்சியாளர்கள் வரை அத்தனை பேரும் ஒவ்வொரு ஊரிலும் கூட்டம் கூடும் இடங்களுக்குப் போய் நின்று கொண்டு ‘யாருக்கு அம்மா ஓட்டு’ என்று லைவாய் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி)வை அடிக்க ஆளில்லை என்கின்றன அத்தனைக் கருத்துக் கணிப்புக்களும். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஐம்பது சதவீதத்திற்கும் மேல் மக்கள் அபிமானத்தை அள்ளிக் கொண்டிருக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஜனாதிபதி ரணிலின் நிலையோ பாதாளத்திற்குச் சற்று மேலே இருக்கிறது.
Add Comment