‘ஜானி’ இங்கிலீஷ் திரைப்படத்தில் மிஸ்டர் பீன் யாரும் எதிர்பாராத விதமாக மன்னரின் கிரீடத்தைத் தட்டிப் பறித்து முடிசூடுவது போன்ற ஒரு காட்சி வரும். அதற்குச் சற்றும் குறையாததுதான் பாராளுமன்றத்தில் ஒரே ஒரு மந்திரியாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகத் தேர்வான பெரும் தலைவர் அற்புத ஜோதி, லிபரல் ஜனநாயக மாணிக்கம் ரணில் விக்ரமசிங்க இலங்கையில் சர்வ அதிகாரமிக்க ஜனாதிபதியான ரகளையும்.
இருபத்தெட்டு வருட ரணில் விக்ரமசிங்கவின் நிரந்தரத் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி படுமோசமாய்ப் பலவீனமடைந்து, கட்சியும் உடைந்து அதன் பெருவாரியான உறுப்பினர்கள் போய் ‘ஐக்கிய மக்கள் சக்தி’ என்ற புதிய கட்சியில் ஐக்கியமாக, 2020 பாராளுமன்றத் தேர்தலில் வெறும் ஒரே ஒரு ஆசனமே ரணிலாருக்குக் கிடைத்தது.
Add Comment