தெருவில் நடந்து செல்லும் ஒருவரை நிறுத்தி அவருக்குப் பிடித்த இசை வகை எது என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறுவார்கள். அந்தளவு ஒவ்வொருவருக்கும் இசை விருப்பம் தனிப்பட்டது. இதைச் சொன்னவர் பெரிய இசைக் கலைஞரோ மேதையோ இல்லை. செயற்கை நுண்ணறிவைக் கொண்டு யார் வேண்டுமானாலும் பாடல்களை உருவாக்க உதவும் சுனோ.ஏஐ (Suno.AI) செயலியின் நிறுவனரான மைக்கேல் ஷுல்மன் (Michel Shulman).
2021இல் மைக்கேலுடன் ஜார்ஜ் குக்ஸ்கோ, மார்ட்டின் காமாச்சோ, கீனன் ஃப்ரைபர்க் ஆகியோர் சேர்ந்து தொடங்கியதுதான் சுனோ. நிறுவனர்கள் நால்வரும் சுனோவிற்கு முன்னர் அமெரிக்காவின் கேம்பிரிஜ் நகரில் இருந்த கென்ஷோ (Kensho) என்கிற இயந்திரக் கற்றல் சேவை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். குறிப்பாக, நிர்வாகத் தலைவரான மைக்கேல் இயற்பியலில் இளங்கலையும், குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் ஆராய்ச்சி செய்து மெய்யியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
இதே காலக்கட்டத்தில் வளர்ந்து வந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு, நிறுவனங்கள் அவர்களின் வருவாய் அறிக்கைகளில் படிப்பதை, பேச்சைப் புரிந்து கொள்ளலாம் என்கிற நோக்கத்தில் தொடங்கப்பட்டது இந்நிறுவனம். என்ன பெயர் வைப்பது என்று சிந்தித்தபோது மார்ட்டின் சொன்ன பெயர் ‘சுனோ’. கேள் என்பதைக் குறிக்கும் இந்தி வார்த்தை ‘சுனோ’.














Add Comment