40 அவஸ்தை அம்மா அப்பா என்று இரண்டு பக்கமும் கன்னடம் மராத்தி என மொழி வேறாக இருந்தாலும் இரண்டு குடும்பங்களிலும் பெரியவர்கள் சின்னவர்கள் என்கிற வித்தியாசமின்றி சிறு வயதிலிருந்தே எல்லோரும் எல்லோரையும் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். தமிழ் பிராமணர்களுக்கே இது முகம் சுளிக்கவைக்கிற விஷயமாக இருக்கையில்...
Tag - சக்கரம்
39 எதிரி அன்றைக்கும் நான்கு மணிக்கே லகுக ரங்கு ஏக்குஹேவைப் பாடி ஷா காக்கா எழுப்பிவிட்டிருந்தாலும் வெளிச்சம் வந்தபிறகுதான் தோனிலிருந்து கிளம்பிற்று பயணம். வழக்கம் போல எல்லோருடைய மூட்டை முடிச்சுகளும் லாரிகளில் ஏற்றப்பட்டுவிட்டாலும் ரேலி புறப்பட்டபாடில்லை. ஏன் இன்னும் புறப்படவில்லை என்பது...
38 சேவை தான் நினைப்பது ஆசைப்படுவது எதுவுமே நடக்காது என்பது இவனுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்தது. நினைக்காததாவது நடந்துவிடுமா என்றால் அதுவும் நடக்காது என்பது வேறு விஷயம். பார்க்கப்போனால், இது ஒன்றும் பிரத்தியேகமானதன்று, மனிதர்களில் பெரும்பாலோருக்குத் தோன்றுவதுதான். வாழ்வின் எதோ ஒரு...
37 முகவரி இவ்வளவு அழகான அமைதியான நடுவயதுப் பெண்களுக்குரிய முதிர்ச்சியுடன் இருக்கிற இவள் காலையில் வந்திருக்கக்கூடாதா இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கலாமே என்று இருந்தது அவள் கிளம்பிப் போவதைப் பார்த்துக்கொண்டு இருக்கையில். முறுவலித்தபடி இவனை நோக்கி வந்தவளிடம், ‘நீங்கள்...
36 களி வழக்கம்போல விடியற்காலை ‘லகுக ரங்கு ஏக்குகெ’ திரும்ப ஆரம்பித்துவிட்டது. கன்யாகுமரி விவேகானந்த கேந்திராவைத் தவிர தமிழகத்து ஊர்கள் எதிலும் அது பாடப்பட்டதாக இவனுக்கு நினைவில்லை. வெள்ளை ஜிப்பா காந்திக் குல்லாவில் பள்ளியெழுச்சி பாடித் துயிலெழுப்புகிற ஷா காக்கா – பெரியப்பா...
35 விருந்து அன்றிரவு அடித்துப் போட்டாற்போலத் தூங்கினான். தோராயமாகப் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு ஒருமுறை வருகிற பெரிய ஊர்களில் ஒரு நாள் உபரியாகத் தங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அது சைக்கிள் ஓட்டுவதிலிருந்து ஓய்வு கொடுப்பதற்காக என்றுதான் ஆரம்பத்தில் எல்லோருக்கும் தோன்றியது. கடுமையான...
34 நிகண்டு ஆங்கிலத்திலும் இந்தியிலுமாக வெடுக் வெடுக்கென சரளமாக விட்டெறிந்து பேசும் நாயர், வீம்பாகச் சொல்லிவிட்டுப் போனாலும் உள்ளூர பொறாமையில்தான் பேசுகிறான் என்பது இவனுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. ஒருவன் ஒருத்தியை அன்பாலோ வசீகரத்தாலோ வென்றெடுப்பது சிலருக்குக் கிளுகிளுப்பையும்...
33 அழைப்பு இரவு படுக்க, காந்தி பவனுக்கு வந்தபோது, அமைதியான சுதீருடன் எல்லாவற்றையும் கிண்டலடித்துக்கொண்டு எகத்தாளமாகப் பேசும் நாயரைப் பார்க்க சற்று வியப்பாக இருந்தது. சுதீருடன் எப்போதும் இருக்கிற ஜோஷி அவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதைப்போல சுவரோரம் சாய்ந்துகொண்டு எதையோ...
32 துணை பெண்ணைவிடப் பெண்ணின் அருகாமையே முக்கியமானது என்று இவனுக்கு எப்போதுமே ஒரு எண்ணம். இவனைப் பொறுத்தவரை நண்பர்கள், தெரிந்தவர்கள் பார்க்கும்படி பெண்களுடன் இருப்பதேகூடப் போதுமானது. கூட இருப்பதையே நெருக்கமாக இருப்பதாக நினைத்து, அசட்டுத்தனமாய்க் கிளுகிளுத்துச் சிரித்தபடி நாலுபேர் விசாரித்தால்கூடப்...
31 வாசம் இந்த அரண்மனையிலா தங்கப்போகிறோம் என்று பிரமிப்பாக இருந்தது. மைசூரில்தானே மகாராஜா அரண்மனை இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இது பெங்களூர் அல்லவா. இங்கு ஏது அரண்மனை என யோசித்தபடி உள்ளே நுழைகையில், பெரிய வரவேற்பறையைத் தாண்டி இருந்த நீள வராண்டாவில் புதுக்கருக்கு மாறாத நீல நிற பேக் கீழே...












