Home » மாமல்லன் » Page 3

Tag - மாமல்லன்

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 33

33 அழைப்பு இரவு படுக்க, காந்தி பவனுக்கு வந்தபோது, அமைதியான சுதீருடன் எல்லாவற்றையும் கிண்டலடித்துக்கொண்டு எகத்தாளமாகப் பேசும் நாயரைப் பார்க்க சற்று  வியப்பாக இருந்தது. சுதீருடன் எப்போதும் இருக்கிற ஜோஷி அவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதைப்போல சுவரோரம் சாய்ந்துகொண்டு எதையோ...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 32

32 துணை பெண்ணைவிடப் பெண்ணின் அருகாமையே முக்கியமானது என்று இவனுக்கு எப்போதுமே ஒரு எண்ணம். இவனைப் பொறுத்தவரை நண்பர்கள், தெரிந்தவர்கள் பார்க்கும்படி பெண்களுடன் இருப்பதேகூடப் போதுமானது. கூட இருப்பதையே நெருக்கமாக இருப்பதாக நினைத்து, அசட்டுத்தனமாய்க் கிளுகிளுத்துச் சிரித்தபடி நாலுபேர் விசாரித்தால்கூடப்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 31

31 வாசம் இந்த அரண்மனையிலா தங்கப்போகிறோம் என்று பிரமிப்பாக இருந்தது. மைசூரில்தானே மகாராஜா அரண்மனை இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இது பெங்களூர் அல்லவா. இங்கு ஏது அரண்மனை என யோசித்தபடி உள்ளே நுழைகையில், பெரிய வரவேற்பறையைத் தாண்டி இருந்த நீள வராண்டாவில் புதுக்கருக்கு மாறாத நீல நிற பேக் கீழே...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 30

30 எலியும் பூனையும் ஊர்வலம்  பெங்களூரை நெருங்கப்போகிறது எனும்போது – நாங்களும் சைக்கிள் ஓட்டுகிறோம் என்கிற பூனே பெண்களின் கோரிக்கை மறுபடி தலைதூக்க ஆரம்பித்தது. பெங்களூர் தன்னுடைய ஊர் என்கிற நிறைவில் சுஜாதா அமைதியாக இருந்திருக்கவேண்டும். அல்லது, முதல் முதலாக அவள் முன்வைத்த, அந்த மூவரைப்போலத்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 29

29 பேச்சு தமிழில் இலக்கியம் என்பதே சிறுபத்திரிகையை மட்டுமே சார்ந்ததாக இருந்தாலும் பேர் சொல்லும்படியான எழுத்தாளர்கள் கவிஞர்கள் என ஊருக்கு ஒருவராவது இருந்துகொண்டிருந்தனர் என்பதுதான் வாழையடி வாழையாய் இலக்கியத்தின் உயிரை இழுத்துப் பிடித்து வாழவைத்துக்கொண்டு இருந்திருக்கவேண்டும். பரீக்‌ஷாவில் இருந்தபோதே...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 28

28 அஸ்திவாரம் ருத்ரைய்யா ஆபீஸில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த இரவொன்றில், சுடச்சுட வந்துகொண்டிருந்த இட்லியைச் சாப்பிட்டபடி இருக்கையில் ‘உன்னோட பாஸ்ட்ட எழுதினாலே போதும் ஆளாயிடுவேன்னு நீ ஒரு தடவை சொன்னே. நினைவிருக்கா‘ என்று இருந்தாற்போலிருந்து கேட்டான் வசந்தகுமார். சொன்னது போலவும்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 27

27 நமக்கல் நாமக்கல் என்கிற பெயர், இரண்டு முதல் நான்கு வயதுவரை சேலத்தில் இருந்த சமயத்தில் அம்மாவின் புலம்பல் மூலமாகத்தான் அறிமுகமானது. சேலத்தில் இருக்கிறோம் என்றுதான் பெயரே தவிர, ஒரு எட்டு போய் நரசிம்மரையும் நாமகிரித் தாயாரையும் பார்க்கமுடியவில்லையே என்று அவள் புலம்பாத நாளே கிடையாது. மூன்று நான்கு...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 26

26 போனோ வண்டியை எடுக்கப் பார்க்கையில் உதைத்து உதைத்துக் காலே போய்விட்டது. என்ன ஆயிற்று என வழிந்த வியர்வையைச் சுண்டிவிட்டுக்கொண்டபடி யோசித்தாள் சுஜாதா.

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 25

25 இருவர். மணப்பாறையிலிருந்து திருச்சி போகும் வழியில், இளவெயிலில் ரேலியை நிறுத்தி, வழக்கமாகக் கொடுக்கப்பட்டும் குசேலக் கொடையான அவில், பேப்பர் தட்டுகளில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 24

எந்த மாமல்லன் என்று அவர் கேட்பதற்குள்ளாக வந்து கதவைத் திறந்த இந்திரஜித், 'நீ உள்ளபோ. வெளக்கு இருக்கட்டும். நான் வெளிய பூட்டிக்கிறேன்' என்று கேட்டைப் பூட்டிக்கொண்டு இவனுடன் இறங்கினார்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!