Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர் » Page 2

Tag - அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 21

சிற்பி செவ்வகத்துக்கு ஒரு சிக்கல். ஜாப்ஸுக்கு அவற்றைப் பிடிக்கவில்லை. செவ்வகம் நல்ல வடிவம்தான். ஆனால் ஜாப்ஸின் பார்வையில் அவை செயற்கையானவை. முதல் முறையாக வாசிக்கும்போது ‘இதென்ன குழப்பம்’ என்றுதான் தோன்றும். முன்கதைச் சுருக்கத்தைத் தெரிந்துகொண்டால் ‘அட… ஆமாம்’ என்று...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 20

காசு மேல… காசு வந்து… மர்க்குலா ஆப்பிளுக்கு வந்த வருடம் 1977. அப்போது ஆப்பிளின் மதிப்பு சில ஆயிரம் டாலர் மட்டுமே. நான்கு ஆண்டுகளில் ஆப்பிளில் நடந்த மாற்றம் அற்புதம். முன்னெப்போதும் நிகழ்ந்திராதது. எண்பதாம் ஆண்டு முடியும் தருணத்தில் ஆப்பிளின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டாலர்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 19

காந்தி, ஐன்ஸ்டைன், ஜாப்ஸ். மேக்கிண்டோஸ் குழு அதிவிரைவாக ஓடிக்கொண்டிருந்தது. தினமொரு சவால். எண்ணற்ற தொழில்நுட்பச் சிக்கல்கள். இவையனைத்துக்கும் மேல் ஒன்றிருந்தது. அது ஜாப்ஸ் பணியாற்றும் விதம். சென்ற அத்தியாயத்தில் மேக் குழுவுக்கு ஆண்டி வந்த கதையைப் பார்த்தோம். ஜாப்ஸ் குறித்த அவரது பயம்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் -18

சொல்லின் செல்வர் ரஸ்கின் இல்லை. எனவே மேக்கிண்டோஸ் ஜாப்ஸ் வசமாகியிருந்தது. தனது மேக் குழுவுக்கு ஆள் பிடித்துக்கொண்டிருந்தார் ஜாப்ஸ். ரஸ்கினிடம் இருந்தது ஒரு சின்னஞ்சிறு குழு. அவரது ஆசையும் சிறியது. பட்ஜெட்டும். ஜாப்ஸுக்கு அவ்வாறான தடைகள் இல்லை. அவரைப் பொறுத்தவரை பெரிதினும் பெரிது கேள் என்பார்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 17

எது தேவையோ அதுவே தர்மம் லிசா டீமிலிருந்து ஜாப்ஸ் விலக்கப்பட்டார். வேறுவழியில்லாமல் மர்க்குலாவின் இம்முடிவை ஜாப்ஸ் ஏற்கவேண்டியதாயிற்று. ஆனாலும் தனித்துவமான கம்ப்யூட்டர் ஒன்றைச் செய்துவிட வேண்டும் என்னும் அவரது ஆர்வம் தொடர்ந்தது. சில வாரங்கள் அமைதியாக இருந்தார். ஆப்பிளின் வெவ்வேறு குழுக்களில் என்ன...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் -16

முகம் மட்டும் போதும் அட்கின்ஸன் குணமாகி வந்ததில் ஜாப்ஸுக்கு மகிழ்ச்சி. தன் குடும்ப உறுப்பினர்களிடம் கூட இவ்வளவு அக்கறை காட்டியிருக்கமாட்டார். அவரது இந்த நடவடிக்கைக்குக் காரணங்கள் இருந்தன. ஜாப்ஸுக்கு இன்டர்ஃபேஸ் எப்படியிருக்க வேண்டும் என்று சொல்லத் தெரியும். ஆனால் அவரால் அதைச் செயல்படுத்த முடியாது...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 15

மிதக்கும் ஜன்னல்கள் அதிகாலை இரண்டு மணி. டெலிஃபோன் ஒலிக்கிறது. நல்ல தூக்கத்திலிருந்த டெஸ்லர் கண்விழிக்கிறார். ரிசீவரை எடுக்கிறார். மறுமுனையில் ஜாப்ஸ். ‘இன்டர்ஃபேஸில் இதையும் சேர்க்கமுடியுமா?’ என எதையோ கேட்கிறார் ஜாப்ஸ். அவரது குரலைக் கேட்டதும் எழுந்து அமர்ந்துகொள்கிறார் டெஸ்லர். அதன்...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 14

படக்கதை கருந்திரை. அதில் பளிச்சென்று ஒளிரும் எழுத்துகள். இவ்வாறுதான் இருந்தன அன்றைய கம்ப்யூட்டர் திரைகள். இவை அனைவரையும் கவரும்படி இல்லை. கம்ப்யூட்டர்களை இயக்க சில மந்திரச் சொற்களைக் கற்கவேண்டியிருந்தது. கமாண்ட்கள். அலிபாபாவின் குகை போல மந்திரத்திற்கு மட்டும் செவிசாய்த்தன. மொத்தத்தில் அவையறிந்தவை...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 13

யார் லிசா? ஆப்பிளின் விற்பனை தொடர்ந்து அதிகரித்தது. ஆப்பிள் II கம்ப்யூட்டருக்கான ஆர்டர்கள் தொய்வின்றி வந்துகொண்டிருந்தன. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து ஏழாம் ஆண்டில் மட்டும் இரண்டாயிரத்து ஐநூறு கம்ப்யூட்டர்களை விற்றது ஆப்பிள். அன்றைய சூழலில் இத்தனை கம்ப்யூட்டர்கள் விற்பது என்பதே ஒரு சாதனை...

Read More
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 12

ஆடுகளம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு முகம் உண்டு. ஆனால் முகம் மட்டுமே உடல் அல்ல. ஆப்பிளின் முகம் ஜாப்ஸ். அவரது உழைப்பு சிறப்பானது. ஆனால் அவர் மட்டுமே ஆப்பிள் அல்ல. ஆப்பிள் இன்றிருக்கும் உச்சத்திற்கு வரப் பலரும் துணையாக இருந்துள்ளனர். சென்ற அத்தியாயத்தில் மர்க்குலா ஆப்பிளின் வளர்ச்சிக்கு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!