Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 19
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 19

காந்தி, ஐன்ஸ்டைன், ஜாப்ஸ்.

மேக்கிண்டோஸ் குழு அதிவிரைவாக ஓடிக்கொண்டிருந்தது. தினமொரு சவால். எண்ணற்ற தொழில்நுட்பச் சிக்கல்கள். இவையனைத்துக்கும் மேல் ஒன்றிருந்தது. அது ஜாப்ஸ் பணியாற்றும் விதம்.

சென்ற அத்தியாயத்தில் மேக் குழுவுக்கு ஆண்டி வந்த கதையைப் பார்த்தோம். ஜாப்ஸ் குறித்த அவரது பயம் நிஜமாகிக்கொண்டிருந்தது.

குழுவில் இருந்த சக பொறியாளர்கள் அவரது பயத்தைப் பன்மடங்கு பெருக்கினர். அதிலொருவர் டிரிபிள்.

வழக்கம் போலவே பணி அழுத்தம் மிகுந்த ஒரு நாள். சிறு இடைவேளையில் டிரிபிளும் ஆண்டியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஜாப்ஸ் குறித்து விநோதமான ஒரு கருத்தைத் தெரிவித்தார் டிரிபிள்.

ஜாப்ஸிடம் ஒரு பேராற்றல் இருக்கிறது. அது உண்மையை மாயையாக மாற்றும் வல்லமை. அதற்கொரு பெயரும் சூட்டியிருந்தது மேக் குழு. ரியாலிட்டி டிஸ்டார்ஷன் ஃபீல்ட் (Reality Distortion Field). ஒரு தேர்ந்த மந்திரவாதியைப் போல உண்மையைத் திரிக்கும் திறன். அவர் கட்டி எழுப்பும் ஒரு மாயையை, உண்மையைவிட நெருக்கமாக உணர வைக்கும் ஆற்றல்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!