பிரபலமான கதை. நிறைய படிக்கப்பட்ட கதை. ஒவ்வொரு புத்தக விழாவிலும் அதிகம் விற்பனையாகும் கதை. எல்லாம் இருக்கட்டும். இருந்தாலுமே தமிழ்நாட்டு மக்கள்தொகையில் மிஞ்சிப் போனால் பத்திருபது சதவீதம் பேர்தான் படித்திருப்பார்கள். படிக்காதவர்கள்தான் பெரும்பான்மை. இப்படிப்பட்ட கதை படமாக்கப்படும்போது யாருக்காகப்...
Tag - இசை
முன் குறிப்பு: இளையராஜா இசையமைக்கும் விதம் குறித்து மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் – அருகிருந்து பார்த்து, எழுதப்பட்ட கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் கார்த்திகேயன் நாகராஜன், பல்லாண்டுக் காலம் இளையராஜாவுடனும் அவரது இசைக் குழுவினருடனும் நெருங்கிப் பழகியவர். இளையராஜாவின் சிறப்புகளை சர்வதேச...
இளையராஜாவை, திரைப்பட இசையமைப்பாளர் என்று வரையறுப்பது பிழை. இந்திய மண்ணில் உதித்த சில மாபெரும் மேதைகளுள் அவர் ஒருவர். அவருடைய திரைப்படங்களின் எண்ணிக்கையோ, அவர் இசையமைக்கிற வேகமோ, அவருடைய பாடல்கள் ஹிட்டான சதவிகிதமோ, அவர் சம்பாதித்த பணமோ, புகழோ, வாங்கிய விருதுகளோ ஒரு பொருட்டில்லை. இவையெல்லாம் வியந்து...
‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?’ என்று ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் கண்ணதாசன் ஒரு பாடலை எழுதியிருப்பார். அதுதான் உண்மை. இசை மொத்தமும் இந்த ஏழு ஸ்வரங்களை வைத்துத்தான். அதற்குள் எத்தனை எத்தனை புதிய பாடல்களை உருவாக்குகிறார்கள், காலத்தில் நிலைக்க வைக்கிறார்கள் என்பதே இசையமைப்பாளர்களின் பெருமை. ஆனால்...
இசை இல்லாமல் தமிழர் வாழ்வு இருந்ததில்லை. நமது வாழ்விலும் மொழியிலும் இசையின் தாக்கம் எத்தகையது என்பதற்கு நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகளை அளிக்க முடியும். தமிழ்மரபின் மூத்த இறைவடிவமான சிவனையே கூத்தன் என்ற அடைமொழி கொடுத்து வழங்கிய இசைப்பெயரின் மூலம் அது இயல்பாக விளங்குகிறது. தமிழில் விளங்கும் அரிய...
என் பெரிய தகப்பனார் பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பணியாற்றினார். பணியின் பொருட்டு அவர் பல நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர். பெரும்பாலும் அவை காவிரியைச் சுற்றிய நகரங்களாகத்தாம் இருந்தன. அத்தகைய பணிச்சுற்றில் சில ஆண்டுகள் ஈரோட்டுக்கருகிலுள்ள முத்தூரில் குடியிருந்தார். அவ்வமயம் அவர் வீட்டில் விழாவும்...
இளையராஜா கடந்து வந்த பாதையில் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது இக்கட்டுரை. பிறப்பு பண்ணைபுரம், தேனி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரக் கிராமம். கோவில்பட்டி சூரங்குடியிலிருந்து ராமசாமி என்பவர் பஞ்சத்தினால் பண்ணைபுரத்திற்குக் குடிபெயர்ந்தார். மதுரை கலெக்டருக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் எஸ்டேட்...