நாட்டுக்குச் சேவை புரிவதற்காகத் தங்களுடைய தனிப்பட்ட இன்பங்களை விட்டுத்தர ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களின் படையொன்றை உருவாக்கவேண்டும் என்று கோகலே ஆழமாக விரும்பினார்.
Tag - கோபால கிருஷ்ண கோகலே
தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதைக் கோகலே உணர்ந்துகொண்டார். 'இந்த உலகத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டேன். அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்' என்று புன்னகையுடன் சொன்னார் அவர்.
இந்திய ஊழியர் சங்கத்தின் மற்ற உறுப்பினர்களும் காந்தியை மதித்தார்கள். ஆனால், அவருடைய வழிமுறைகள் தங்களுடைய சங்கத்துக்குப் பொருந்துமா என்று அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
காந்திக்கும் இந்திய ஊழியர் சங்கத்துக்கும் நன்கு பொருந்திப்போகும் என்று கோகலே கருதினார். ஆனால், சங்கத்திலிருக்கும் மற்றவர்களும் அப்படி நினைக்கவேண்டுமில்லையா?
கோகலே செர்ரிப் பழங்களை விரும்பிச் சாப்பிடுவார். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விலை உண்டு என்பார்கள். உங்களுடைய விலை, செர்ரிப் பழங்கள்தான் என்று கிண்டலடித்துச் சிரிப்பார் சரோஜினி நாயுடு.
காந்தி தென்னாப்பிரிக்காவில் கப்பலேறியபோது உலகம் அமைதியாகத்தான் இருந்தது. பதினெட்டு நாட்கள் கழித்து அவர் லண்டனில் கரையிறங்குவதற்குள் உலகப்போர் அறிவிக்கப்பட்டுவிட்டது.
கோகலேவுக்கும் காந்திக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. தன்னுடைய ஆசிரியர்மீது மிகுந்த மதிப்பை வெளிப்படுத்தியபடி அவருடைய கருத்துகளைப் பணிவோடு மறுத்துப் பேசி வாதாடுவதில் காந்தி மன்னர்.
தென்னாப்பிரிக்காவில் என்ன நடக்கிறது என்று காந்தி தந்திமூலம் தெரிவித்துக்கொண்டிருந்தார். ஒரே ஒரு நாள் அவருடைய தந்தி வரவில்லையென்றாலும் கோகலே விடமாட்டார்.
'கோகலேவின் விளையாட்டுகள்கூட வெறும் பொழுதுபோக்குகளாக இருக்கவில்லை என்று நான் புரிந்துகொண்டேன்' என்கிறார் காந்தி. அங்கும் அவருடைய நாட்டுப் பற்றுதான் வெளிப்பட்டது.
டால்ஸ்டாய் பண்ணையில் கோகலே தங்கிய நாள்களைப்பற்றி, 'என்னுடைய அறியாமை கலந்த அன்பினால் கோகலேவை என்ன பாடு படுத்தினேன் என்பதை நான் எப்போதும் மறக்கமாட்டேன்' என்றார் காந்தி.












