57 சிரிப்பும் அழுகையும் சைக்கிள் ரேலியில் வந்துகொண்டிருந்த லாரிகளும் பாபாவின் ஆம்புலன்ஸாக இருக்கிற வேனும் போகக் கிட்டத்தட்ட அதே போன்ற இன்னொன்றும் வர ஆரம்பித்திருப்பதைத் தற்செயலாகத்தான் பார்த்தான். அவ்வளவு பெரிய வண்டி புதிதாக வருவதைக்கூடக் கவனிக்காமல் இருந்தவனுடைய கவனத்தைக் கவர்ந்தது...
Tag - சக்கரம்
56 ஏற்றமும் இறக்கமும் சைக்கிளோட்டிகளுக்கு மிகப்பெரிய சவால் என்று சுதீர் சொல்லிக்கொண்டிருந்த கஸாரா காட் இகத்புரிக்கு முன்னால் வந்தேவிட்டது. சாலை பார்க்கவே மிரட்டலாகத்தான் இருந்தது. ஏறக்குறைய எல்லோரையுமே இறங்கித் தள்ளிக்கொண்டு போகவிட்டிருந்தது. துரைசாமி சப்வேயில் இதே BSA SLRல் ஜெயகாந்தனை...
55 ஓட்டம் பயணத்தின் அடுத்த நிறுத்தமான பிவாண்டி வந்தும் பாம்பே பற்றிய நினைவுகள் எண்ணங்களைக் கிளறிக்கொண்டிருந்ததால் நிஜமாகவே அது இந்தியாவின் மிக முக்கியமான நகரம்தான் எனத் தோன்றியது. பாம்பே மட்டுமில்லை இந்த சைக்கிள் ரேலியே நிறைய யோசிக்கவைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். பயணத்தின் முக்கியத்துவமே...
54 ஹை அண்ட் லோ ‘நாளை தாராவி செல்கிறோம்’ என்று நாயர் சொன்னதற்கு ஒன்றுமே சொல்லாமல் சுதீர் அமைதி காத்ததைப் போல நாமும் வராமல் கழன்றுகொண்டிருந்திருக்கலாமோ எனத் தோன்றிற்று. இந்த சைக்கிள் பயணம் ஊர் சுற்றிப் பார்க்கும் டூர் இல்லை. மனிதர்களைத் தெரிந்துகொள்வதற்கானது. தேசத்தைப்...
53 பாம்பே அம்பை வீட்டை அடைந்தது மதியத்துக்குக் கொஞ்சம் முன்னர் என்பதால் அவர் சமைத்துக்கொண்டிருந்தார். சமைக்கிற அம்பையைப் பார்க்கக் கொஞ்சம் தமாஷாக இருந்தது. ‘அம்பை சமைப்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை’ என்றான். ‘ஏன் அம்பைக்குப் பசிக்காதா. அவ சாப்ட வேண்டாமா’ என்று...
52 விசாலம் லோனாவாலாவிலிருந்து பன்வேல் போவதற்கு ஏறக்குறைய பூனவிலிருந்து லோனாவாலாவுக்குப் போன நேரமே ஆனதை வைத்து இரண்டும் ஒரே தூரமாக இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டான். பன்வேலிலிருந்து பாம்பே பக்கம் என்று சுதீர் சொல்லியிருந்தான் என்றாலும் அதற்காகப் பாம்பே அதிகாலையிலேயே வந்துவிடும் என்று...
51 சரிவு போக இருப்பது லோனாவாலா. பாம்பேக்கு அருகிலிருக்கிற உல்லாச ஸ்தலம் என்று எல்லோரும் குஷியாக இருந்தார்கள். இவ்வளவு எதிர்பார்த்தால் கண்டிப்பாகக் கட்டாந்தரையில்தான் கொண்டுபோய் உட்கார வைக்கப்போகிறார்கள் என்று இவன் சுதீரிடம் கூடச் சொன்னான். ‘பாசிபிள்’ என்று அவனும் சிரித்துவைத்தான்...
50 கனவுக் கதை பலருக்கும் கனவாக இருக்கிற பாம்பே இன்னும் இரண்டே நாட்களில் வரவிருக்கிறது என்பதைவிடவும் லோனாவாலாவை நோக்கி லாரியில் போய்க்கொண்டிருக்கும்போதும் பார்த்துவிட்டு விட்டு வந்த பூனா திரைப்படக் கல்லூரிதான் மனம் முழுக்க வியாபித்திருந்தது. பூனா ஃபில்ம் இன்ஸ்டிடியூட் இருக்கிற ஊரில்...
49 கனவு நேற்று காடு இன்று நகரம். நேற்று டெண்ட்டு தங்கல் இன்று பெரிய கட்டடம். இப்படியே இரவும் பகலும் போல மாறி மாறி காஷ்மீர் வரை வந்துகொண்டேயிருக்குமோ என அண்ணாந்து அந்த சாம்பல் நிறக் கட்டத்தைப் பார்த்தபடி லாரியிலிருந்து டிரைவர் கொடுத்த சைக்கிளை அனாயாசமாக வாங்கி பாரை வலது தோளில்...
48 முடம் இந்தபூரிலிருந்து போய்க்கொண்டிருக்கையில் வழி நெடுக மரங்களாக இருந்தன. எங்கே போகிறோம் என்று டிரைவரிடம் கேட்டான். ‘பிக்வான். கிட்டத்தில்தான் இருக்கிறது’ என்றார். மராத்திக்காரர்களுக்கு எடுத்ததும் மராத்திதான் வந்தது என்றாலும் மராத்தி அல்லாதவர்களிடம் இந்தியிலேயே பேசினார்கள்...













