அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்று சொல்வது வேறு. அப்படியொன்று நடந்ததாகக் காட்டிக்கொள்ளாமலேயே இருந்துவிடுவது முற்றிலும் வேறு. புரட்சி, போராட்டம், விடுதலைப் போர் என்று வருகிற செய்திகள் அனைத்தும் ஒருதலைப்பட்சமானவை மட்டுமே என்று உலகம் எடுத்துக்கொண்டுவிடும் அல்லவா?
Tag - விடுதலைப் போர்
இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு நிலவரப்படி பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தில் சுமார் ஆறாயிரம் பேர் இருக்கலாம் என்று அமெரிக்க உளவுத் துறை சொன்னது. அந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா பி.எல்.ஏவைத் தீவிரவாத இயக்கமாக அறிவித்து எச்சரிக்கை போஸ்டர் ஒட்டியது.
பாகிஸ்தான் எல்லா விதங்களிலும் மாறுபட்ட நாடல்லவா? அவர்கள் பயங்கரவாதிகளைத் தியாகிகள் என்று சொல்வார்கள். முசஃபராபாத் என்னும் தன்னாட்சிப் பிராந்தியத்தையே அவர்களுக்குத் தூக்கிக் கொடுத்து, சுதந்தரமாக வாழவும் சொகுசு குறையாதிருக்கவும் ஆவன செய்வார்கள்.
பலூசிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களுள் மிகப் பெரியது. நாட்டின் மொத்தப் பரப்பளவில் நாற்பத்து நான்கு சதவீதத்தை உள்ளடக்கியது. அத்தனை பெரிய நிலத்தில் கொல்லப்பட்டவர்கள் போக உயிருடன் மீதமிருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். மொத்தமே ஒன்றரைக் கோடிக்கும் சற்றுக் குறைவு.












