ஹமாஸை ஒழித்து பணயக் கைதிகளை மீட்கப் போரை ஆரம்பித்தது இஸ்ரேல். இரு இலக்கு. ஒர் ஆண்டு. 40000க்கும் மேற்பட்ட அப்பாவிகளை கொன்று குவித்த பிறகும் இலக்கை அடையவில்லை. அதனாலென்ன புதிய இலக்குடன் லெபனான், ஈரான் பக்கம் போகலாம். நம்மை யார் கேட்கப் போகிறார்கள் என்கிற நினைப்பில் படுகொலைகளைத் தொடர்கிறது இஸ்ரேல்...
Tag - ஹிஸ்புல்லா
ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸருல்லா கொல்லப்பட்டிருக்கிறார். லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது செப்டம்பர் 28ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். “எங்கள் நீண்டகால எதிரி கொல்லப்பட்ட பிறகு, உலகம் பாதுகாப்பான, வாழத் தகுந்த இடமாக மாறியிருக்கிறது” என்கிறார் இஸ்ரேலின்...
கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் பழிக்கு-பழி கொலைகள் நாடுகளைக் கடந்து எல்லைகளைக் கடந்து தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை அழிக்க பேஜர் தாக்குதல்களைச் செய்தது இஸ்ரேல் நாட்டின் உளவுத் துறை என்று...
அமெரிக்கர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை, லெபனான் பக்கம் போக வேண்டாம் என்று அமெரிக்க அரசு அறிவித்தாகிவிட்டது. டச்சு வெளியுறவு அமைச்சகம், “லெபனான் பாதுகாப்பற்றதும் கணிக்க முடியாததுமான நிலையில் இருக்கிறது” என்று கூறியுள்ளது. கனடாவோ, “வாய்ப்பிருக்கும்போதே திரும்பி வந்துவிடுங்கள்” என்று தங்கள்...
மே 19-ஆம் தேதி ஈரான் அதிபர் இப்ராஹீம் ரெய்ஸி எதிர்பாராதவிதமாய் விமான விபத்தில் கொல்லப்பட்ட போது அதுவரை அணிந்திருந்த மத்தியக் கிழக்கு தற்காலிக தாதா மாஸ்கை கழற்றி வைத்தது ஈரான். “சற்று நில்லுங்கள் தம்பிகளே! உள்ளூரில் கொஞ்சம் வேலை இருக்கிறது” என்று தன் ப்ரொக்ஸிகளான ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஏமனின்...
இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் தாங்கள் சுற்றுலா செல்லும் நாடுகளைச் சுற்றிக் காண்பிப்பது போல இஸ்ரேலைச் சுற்றிக் காட்டும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது ஹிஸ்புல்லா. வைரல் ஆனாலும் லைக்ஸ் இல்லை. ஏனெனில் இவர்கள் வெளியிட்ட ட்ரோன் விடீயோக்களில் இஸ்ரேல் ராணுவத் தலைமையிடங்கள், குடியிருப்புகள் எல்லாம்...
பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற கேள்விதான் முதலில் வரும். மத்தியக் கிழக்கு நாடுகளில் எங்கு மிசைல்கள் விழுந்தாலும் இந்தக் கேள்வியும் வந்துவிடும். கூடவே “மூன்றாவது உலகப் போர்...
சனிக்கிழமை என்பது அநேகமான உலக நாடுகளில் விடுமுறை தினம். அதுவும் யூதர்களுக்குச் சனிக்கிழமை என்பது முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை போன்றொரு புனித நாள். வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள் எல்லாவற்றையும் இழுத்துச் சாத்திவிட்டு ஓய்வில் இருப்பார்கள் இஸ்ரேலியர்கள். இப்பேர்பட்ட சனிக்கிழமை ஒன்று, யூதர்களின்...