மனித குலத்தின் சராசரி ஆயுள் காலம் அதிகரித்துக் கொண்டே போகிறது. முக்கியமான காரணம் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள அறிவியல் முன்னேற்றங்கள். உயிரை எடுக்கக் கூடிய பல நோய்கள், அறிவியல் வளர்ச்சியினால் குணமாக்கக் கூடியதாக மாறி இருக்கின்றன. இது சராசரி ஆயுட்காலத்தைக் கணிசமாக அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டோடு...
Tag - தொழில்நுட்பம்
முப்பரிமாண அச்சிடுதல் (3D Printing) என்பது தற்போது பொதுவாகப் பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்து இதில் என்ன புரட்சி செய்யலாம்? முப்பரிமாணத்தை நான்கு பரிமாணமாக்க முடியுமா?. பொதுவாக நான்காவது பரிமாணம் எந்று சொல்லும் போது அது காலத்தையே குறிக்கும். அதாவது அச்சு இயந்திரத்திலிருந்து வெளியே...
ஆடைகளை வாங்கும்போது முக்கியமான பிரச்சினை அவை நமக்கு அளவாக இருக்குமா? என்பதே. எந்த ஒரு ஆடையையும் அணிந்து பார்க்காமல் வாங்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. பொதுவாக சைஸ் என்று ஒன்று லேபலில் போட்டிருப்பார்கள். அது அளவுக்கான ஒரு அண்ணளவான வழிகாட்டி மட்டுமே. அதை மட்டுமே நம்பி நமக்குச் சரியாகப்...
ஜன்னலோரம் இருந்த கைக்குழந்தைகளின் தொட்டில்களை, அறைக்கு நடுவே அவசரமாக நகர்த்துகிறார்கள். அந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டிலிருந்த எல்லாத் தொட்டில்களையும் அறையின் நடுவே வட்டமாக நெருக்கப்படுத்துகின்றனர். மூன்று செவிலியர்கள் வெளிப்புறமாக அதைச் சுற்றி நின்று, கை எட்டும் தூரம்வரை நீட்டி, தொட்டில்களை...
வெள்ளை மாளிகையில் பேய் அந்தப் புதிய வீட்டின் வாசம் இன்னமும் குறையவில்லை. அவ்வீடு பவித்ராவின் கனவு. அவளுக்கென ஒரு வீடு. பார்த்துப் பார்த்துக் கட்டியிருக்கிறாள். வேலைகள் அனைத்தும் முடிய ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. எல்லாமும் முடிந்து இங்கு வந்து பத்து நாள்கள் ஆகின்றன. தெருமுனையில் இருந்து பார்த்தால்கூட...
இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி கற்கும் மாணவர்களில் அனேகமானோரின் கனவு ஏதாவது ஒரு ஐஐடி காலேஜில் படிக்க வேண்டும் என்பதே. அதற்கான தேர்வுப் பரீட்சைகளுக்குத் தயாராகப் பல வருடங்களாகப் பெற்றோரும் மாணவர்களும் உழைக்கிறார்கள். ஐஐடி எனும் பிராண்ட் இந்தியாவில் மட்டுமல்ல… உலகெங்கும்...
இந்தியாவின் இளைஞர் கூட்டம் உயர்கல்விக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் மேலை நாடுகளுக்குச் செல்வது தொண்ணூறுகளிலிருந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆங்கில மொழி பேசும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் பெருமளவில் மாணவர்கள் கல்வி கற்கச் சென்றுள்ளனர். சமீபகாலமாக ஆங்கில மொழி...
ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார். இத்தளத்தை மாற்றி அமைக்க லிண்டா யாக்கரினோவுடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் எலான் மஸ்க். அவர் கடந்த ஆண்டு...
‘பிங்க் சிலிப்’ (Pink Slip) என்றிரு வார்த்தைகள். வாசிக்க அழகாய்த் தான் உள்ளன. ஆனால் அர்த்தம் கொடுமையானது. பிங்க் சிலிப் கொடுப்பது என்றால் ஒருவரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்புவது. நவயுக இளைஞர்களின் மிகப்பெரிய பயம் திடீர் வேலை இழப்பு. சமீபகாலமாக நாம் அடிக்கடி கேள்விப்படும் விஷயங்களில் முக்கியமான...
பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் இருபத்தியொரு பட்டப்படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்கப்படாது என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கும் / படித்து முடித்திருக்கும் அத்தனை மாணவர்களும் பேச்சற்றுப் போயிருக்கிறார்கள். கல்வி...