Home » பலூசிஸ்தான் » Page 8

Tag - பலூசிஸ்தான்

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 6

முதல் முதலாக ஒரு பலூச் கூட்டமைப்பு உருவானது. ஒரு நாடாக, முடியரசாக, கான்களின் சாம்ராஜ்ஜியமாகப் பின்னாளில் பலூசிஸ்தான் புதிய தோற்றம் கண்டதற்கெல்லாம் தொடக்கப் புள்ளி அதுதான். ஜலால் கானின் வாரிசுகள் பலூசிஸ்தானை ஒரு சாம்ராஜ்ஜியமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 5

நாடோடிகளாக இருந்த பலூச்சிகள், தங்கி வாழலாம் என்று முடிவு செய்த காலத்தில் ஏராளமான போர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. தங்கள் நிலம், பார்க்கிற அத்தனை பேரின் கண்ணையும் உறுத்துகிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஏனென்றால் அது எல்லா விதங்களிலும் அள்ளிக் கொடுக்கும் மண்ணாக இருந்தது.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 4

அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்று சொல்வது வேறு. அப்படியொன்று நடந்ததாகக் காட்டிக்கொள்ளாமலேயே இருந்துவிடுவது முற்றிலும் வேறு. புரட்சி, போராட்டம், விடுதலைப் போர் என்று வருகிற செய்திகள் அனைத்தும் ஒருதலைப்பட்சமானவை மட்டுமே என்று உலகம் எடுத்துக்கொண்டுவிடும் அல்லவா?

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 3

இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு நிலவரப்படி பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தில் சுமார் ஆறாயிரம் பேர் இருக்கலாம் என்று அமெரிக்க உளவுத் துறை சொன்னது. அந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா பி.எல்.ஏவைத் தீவிரவாத இயக்கமாக அறிவித்து எச்சரிக்கை போஸ்டர் ஒட்டியது.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 2

பாகிஸ்தான் எல்லா விதங்களிலும் மாறுபட்ட நாடல்லவா? அவர்கள் பயங்கரவாதிகளைத் தியாகிகள் என்று சொல்வார்கள். முசஃபராபாத் என்னும் தன்னாட்சிப் பிராந்தியத்தையே அவர்களுக்குத் தூக்கிக் கொடுத்து, சுதந்தரமாக வாழவும் சொகுசு குறையாதிருக்கவும் ஆவன செய்வார்கள்.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 1

பலூசிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களுள் மிகப் பெரியது. நாட்டின் மொத்தப் பரப்பளவில் நாற்பத்து நான்கு சதவீதத்தை உள்ளடக்கியது. அத்தனை பெரிய நிலத்தில் கொல்லப்பட்டவர்கள் போக உயிருடன் மீதமிருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். மொத்தமே ஒன்றரைக் கோடிக்கும் சற்றுக் குறைவு.

Read More
உலகம்

பலூசிஸ்தான் என்னும் பாவப்பட்ட பூமி

கடந்த ஜனவரி பதினெட்டாம் தேதி இரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் என்ற செய்தி வந்து, நாமெல்லாம் சிறிது வியப்புடன் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தோம். பொதுவாகப் பாகிஸ்தான் தாக்குவதென்றால் நம் பக்கம்தானே திரும்பும், இதென்ன புதிதாக இரானுடன் மோதுகிறது என்று வியந்தோம். வியப்புக்கு இன்னொரு காரணம், இப்போது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!