Home » நடக்கற எதுவும் நல்லால்ல!
உலகம்

நடக்கற எதுவும் நல்லால்ல!

கிரகங்களின் மாற்றம், ஒன்றன் பின் ஒன்றாகக் கஷ்டங்களைக் கொண்டு வந்தால் பரவாயில்லை. ஆனால் ஒன்பது கோள்களும் சேர்ந்துகொண்டு ஒரே நேரத்தில் சுழற்றி அடித்தால்? கடந்த வாரம் அப்படித்தான் கதிகலங்கிப் போனது அமெரிக்கா.

எங்கோ யாரோ செய்த சிறிய மாற்றம், நாட்டின் ஒட்டுமொத்த விமானப் பயணங்களையும் ரத்து செய்ய வைத்தது. பத்தாயிரம் விமானங்கள் பறக்காததால் பாதிக்கப்பட்ட மக்கள் பல லட்சம். சர்வதேச விமானங்களும் பாதிப்புக்கு ஆளாகின.

தொழில்நுட்ப நங்கூரங்களாகச் செயல்படும் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்களின் சேவைகள் செயலிழந்தன. பல கோடிக்கணக்கான மக்கள் விவாதக் கூட்டங்களில் பங்கெடுக்க முடியாமலும், மின்மடல்களைப் பெற முடியாமலும் தடுமாறினர். ஆப்பிள் பே (Apple Pay) வேலை செய்யவில்லை; வங்கிகளின் பணப் பரிமாற்றங்களும் தடுமாறின. அமெரிக்கா பெரும் சவால்களை எதிர்கொண்டது.

விலைவாசி குறைந்தபாடில்லை. நன்றி நவிலல் (Thanksgiving) விடுமுறைக்கு உறவினர்கள் வீட்டுக்குச் செல்வது பெரும்பாலான அமெரிக்கர்களின் வழக்கம். ஆனால் இந்த வருடம், எரிபொருள் விலை கட்டுப்படியாகக் கூடியதாக இல்லை. ‘நான் ஆட்சிக்கு வந்தால் போர் தொடுக்க மாட்டேன்’ என்று கூறிப் பதவிக்கு வந்த டிரம்ப், உப்பு சப்பில்லாத காரணங்களுக்காகத் தேவையற்ற போர்களில் அமெரிக்காவை ஈடுபடுத்தியிருக்கிறார். திறந்தே இருந்த ஹோர்முஸ் நீரிணையை மூடவைத்து, மீண்டும் திறக்க முயலும் அவருடைய வீரதீரம் விற்பன்னர்கள் கூட அறியாதது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!