அறுபடை வீடுகளில் சூரசம்ஹாரம் நடந்து முடிந்திருக்கிறது. திருநெல்வேலி கழுகுமலையின் கந்தசஷ்டி தனி விதம். இங்கு கோபுரம் இல்லை. மலையே விமானம். முருகனுக்கு முகம் ஒன்று, கைகள் ஆறு.
இவ்வூரின் சூரன் பொம்மைகள் தனி. சூரபத்மனும் தாரகாசுரனும் சிங்கமுகனும் மக்களுடன் மக்களாகத் தரையில் ஆடுவார்கள்.
ஆறு நாளும் ஓதுவார்கள் போருக்கு முன் தூது செல்வார்கள். தூதுவர்கள் எதிரெதிர் நின்று பேசுவார்கள்.
‘வாரும் பிள்ளாய்.. சூரபத்மாவே..! நீ நீண்ட காலம் தவமிருந்து சிவப் பரம்பொருளிடம் வரங்களைப் பெற்றுள்ளாய். உன்னை யாராலும் அழிக்க முடியாது என எண்ணாதே. நீ கந்தனை பாலகன் என நினைக்காதே. உன்னைக் குலத்தோடு வேரறுத்து விடுவான். சிறை பிடித்துள்ள தேவர்களை நீ விடுவித்தால், உன் குலத்தோடு நீடு வாழ்வாய்..!’ என்று வசனம் படிப்பார்.















Add Comment