ரஷ்யாவின் ஆலிகார்க்குகள் ரஷ்ய அதிபர் புதினை மறைமுகமாக ‘தாத்தா’ என்கிறார்கள். பேரன் பேத்திகள் தாத்தா என்று அழைப்பது குடும்பத்தில் அவரது மரியாதை அதிகரிப்பதைக் குறிக்கும். முதலாளி என்றவர்கள் தாத்தாவுக்கு மாறுவது நிச்சயம் நல்லதல்ல. அதுவும் உலகின் முக்கியத் தலைவர்களே அடக்கி வாசிக்கும் அதிபர் புதினை உள்நாட்டில் அப்படி அழைப்பது இருதரப்புக்கும் கொஞ்சம் சிக்கல்தான்.
எல்லாம் முடிவு தெரியாமல் தொடரும் உக்ரைன் மீதான போரின் விளைவு. விக்கிரமாதித்தனின் வேதாளம் போலப் புதுப்புது துறைகளில் விதிக்கப்படும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் உண்டாகும் சலிப்பு. ரஷ்யாவின் எதிர்காலம் மாறுமா? என்னவாக உருமாறும்? என்ற கேள்விகளே குழப்பத்துக்குக் காரணம்.
உக்ரைன் போரை அறிவித்த கையோடு ரஷ்யாவின் முப்பதுக்கும் மேற்பட்ட ஆலிகார்க்குகளைச் சந்தித்தார் அதிபர் புதின். எப்போதும் போல நீண்ட இடைவெளிவிட்டு, ஒருபுறம் ஆலிகார்க்குகளும், மறுபுறம் ஒற்றை ஆளாக புதினும். பேசியது அவர் மட்டுமே.















Add Comment