Home » உரி – 85
உரி • நாள்தோறும்

உரி – 85

85. தன்னெஞ்சறிவது

நான் சார்வாகனின் சிந்தைக்குள் இருந்தேன். அவனாலுமே எதையும் சிந்திக்க இயலாத வண்ணம் எங்கெங்கும் ஆனந்தக் கூச்சலும் ஆரவாரமும் எழுந்து அவன் செவிகளை நிறைத்துச் சிந்தையை அடைத்துக்கொண்டது. அருமொழி கோயிலை நெருங்கிவிட்டதை உணர்ந்தேன். எங்கிருந்தோ ஒரு வீரன் ஓடி வந்தான்.

ஏய், அங்கே இன்னும் என்ன செய்துகொண்டிருக்கிறாய்? மன்னர் நெருங்கிவிட்டார்,

என்று சார்வாகனைக் கட்டி வைத்து உரையாடிக்கொண்டிருந்த வீரனுக்குத் தகவல் அளித்துவிட்டு மீண்டும் ஓடினான்.

நீ இரு. உன்னை வந்து பார்த்துக்கொள்கிறேன்,

என்று அவன் முறைப்புடன் சார்வாகனிடம் சொல்லிவிட்டுத் தன் பணிக்குத் திரும்பினான். போகுமுன் எச்சரிக்கையுடன் கட்டு சரியாக, உறுதியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டே சென்றான். அவன் திரும்பி வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும் என்பது தெரிந்துவிட்டது. ஆனால் இந்தக் காத்திருப்பு சில திறப்புகளை அளிக்கலாம் என்று தோன்றியது. இவன் ஏன் இப்படி இல்லாததை உளறுகிறான் என்று சார்வாகன் சிறிது கவலை கொண்டு சிந்தித்ததைக் கண்டேன். அக்கணம் அவன் மீது எனக்குப் பரிவு போன்றதோர் உணர்ச்சி ஏற்பட்டது. இப்படியொரு வாழ்க்கை யாருக்கும் நேரக்கூடாதுதான். இது என்ன பிறவி, எதற்காக இப்படியொரு பிறவி என்று தோன்றியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!