Home » திசையெலாம் தமிழர் – 25
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 25

சுவாமி சிவசுப்ரமணியன்

இன்று பெருநிறுவனங்களுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறியிருக்கிறது. இயந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகியவை நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் எட்டுகிற தொழில்நுட்பமாக மாறியதற்கு அமேசான் நிறுவனமும் ஒரு காரணம். அவர்களுடைய அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) என்ற சேவை அந்த வாய்ப்பினை வழங்குகிறது.

AWS சேவை வழியாக இயங்கும் Amazon SageMaker முழுமையாக கிளவுடில் இயங்கும் ஒரு தளம். இதற்கான யோசனையும் ஆரம்பகட்டப் பணிகளும் சென்னையிலிருந்து வடிவம் பெற்றது. தமிழரான சுவாமி சிவசுப்ரமணியன்தான் இந்தத் திட்டத்துக்கான அடித்தளத்தை அமைத்தவர். இவர் மேகக் கணினித் துறையில் சர்வதேச அளவில் தனித்த இடத்தைப் பெற்றவர். டிஸ்ட்ரிபியூட்டட் கம்ப்யூட்டிங் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

இயந்திரக் கற்றல் மாதிரிகளை உருவாக்குவதும், அவற்றைச் செயல்படுத்துவதும் மிகச் சிக்கலான பணி என்பதை அறிந்தவர். அதற்குத் தனித்துவமான கணினி வசதிகளும் தரவு விஞ்ஞானிகளும் அவசியம் என்பதை உணர்ந்தவர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!