10. ராணுவப் புரட்சிகளின் காலம்
சிரியாவில் நடைபெற்ற ஆட்சி நிலையற்றதாக இருந்தது. போரினால் உண்டான விளைவுகள் தேசத்தைச் சர்வநாசமாக்கி இருந்தன. இது ராணுவ அதிகாரிகள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியது.
ஜனநாயகம் எல்லாம் சரிப்பட்டு வராது என்று முடிவு செய்த ஹுஸ்னி அல்-சைன், ஆட்சிக் கவிழ்ப்புக்குத் தயாரானார். ஹுஸ்னி சிறுபான்மை குர்த் இனத்தைச் சேர்ந்தவர். ஓட்டோமான் ராணுவம், ஃபிரெஞ்சு ராணுவம் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். ராணுவ வீரராகத் தொடங்கி, படிப்படியாக முன்னேறி ராணுவத் தளபதியாக உயர்ந்திருந்தார்.
தன் ஆதரவுப் படையுடன் சிரிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டார் ஹுஸ்னி. எந்தவித வன்முறையும் இன்றி நாடாளுமன்றம் கைப்பற்றப்பட்டது. அதிபர் ஷுக்ரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆட்சியும் அரசியல் அமைப்புச் சட்டமும் கலைக்கப்பட்டன.










Add Comment