Home » ஒரு குட்டித் தீவின் குதூகலம்!
உலகம்

ஒரு குட்டித் தீவின் குதூகலம்!

தென்கிழக்கு ஆசியாவின் பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள குட்டித் தீவு நாடு கிழக்கு திமோர். அதிகாரப்பூர்வமாக திமோர் லெஸ்டே என்று அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே அமைந்துள்ள திமோர் கடற்பகுதியில் இத்தீவு அமைந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் உருவான முதல் சுதந்தர நாடு இது.

இந்நாட்டின் வரலாறு, போராட்டங்களின் சுவடுகளால் ஆனது. பல நூற்றாண்டுகள் காலனித்துவத்தின் அடக்குமுறையையும் ராணுவ ஆக்கிரமிப்பின் அட்டூழியங்களையும் கடந்து தன்னாட்சி அடையாளத்தை மீட்டெடுத்த நாடுதான் கிழக்கு திமோர்.

கிழக்கு திமோரின் மொத்தப் பரப்பளவு சுமார் 14,874 சதுர கிலோமீட்டர். இது உலகின் 128ஆவது சிறிய நாடு. மலைத்தொடர்கள், ஆறுகள், அடர்ந்த காடுகள் மற்றும் நீலக் கடற்கரைகள் கிழக்கு திமோரின் இயற்கை எழிலைப் பாங்குடன் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக, வெண்ணிறக் கடல் மணல்பரப்புக்குப் பெயர் பெற்ற தீவு இது. தலைநகரமான டிலி, கடற்கரையோரம் அமைந்த அமைதியான நகரம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!