Home » 2கிமீ உயரத்தில் ஒரு மொட்டை மாடி
உலகம்

2கிமீ உயரத்தில் ஒரு மொட்டை மாடி

கனவுகளுக்கு எல்லை இல்லை என்ற வார்த்தைகள் மத்தியக் கிழக்கில் நிஜமாகிக்கொண்டிருக்கின்றன. உலகின் மிக உயரமான கட்டடமான புரூஜ் கலீஃபாவின் 828 மீட்டர் உயரம் இனி வரலாறாகிவிடும். அதற்குக் காரணம், சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான், புரூஜை விட இரண்டு மடங்கு உயரமான கட்டடத்தைக் கட்ட முடிவெடுத்துள்ளார்.

2015ஆம் ஆண்டு சவூதியின் மிக இளம் வயது பாதுகாப்பு அமைச்சராக சல்மான் பொறுப்பேற்றார். பாதுகாப்புத்துறை எல்லாம் ஒப்புக்காக மட்டுமே. சவூதி அரசர்கள் மனத்திலும் மூளையிலும் எண்ணெய்யைத் தாண்டி ஒரு எண்ணம் இருந்ததில்லை. ஆனால் சல்மான் வேறு ரகம்.

2016ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் அறிவித்த ‘விஷன் 2030’ வெறும் பொருளாதாரத் திட்டம் அல்ல. அது ஒரு மாபெரும் சமூக மாற்றம். ‘எங்கள் நாட்டின் எதிர்காலம் எண்ணெய்யை மட்டும் சார்ந்ததல்ல, மக்களின் மனத்தையும் அவர்களின் திறமையையும் சார்ந்தது’ என்று அவர் சொன்ன வார்த்தைகள் இன்று நிஜமாகிக்கொண்டிருக்கின்றன. பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி, மற்ற நாட்டவர்கள் கலாசாரக் கெடுபிடிகளில் இருந்து விடுபட்ட கதையெல்லாம் அங்கு ஆரம்பித்ததுதான். அதில் இந்தக் கட்டடமும் ஒரு முக்கியமான அம்சம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!