உலக சரித்திரத்தில் இப்படியும் நடக்குமா என்று அசரவைக்கும் சம்பவம் ஒன்று கடந்த வாரம் வடகொரியாவில் பதிவாகி இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை.வடகொரியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார் இருபத்து மூன்று வயதான ட்ராவிஸ் கிங் என்ற அமெரிக்க ராணுவ வீரர்.
தகவல் தொழில் நுட்பத்தில், அறிவியலில், விண்வெளி ஆய்வில்,ஆயுத உற்பத்தியில் கரைகண்ட அமெரிக்கா, உலக நாடுகளின் பலமான பாஸ்போர்ட் தரவரிசையில் முதன்மை ஸ்தானத்தில் இருக்கும் அமெரிக்கா, உலகத்தில் எங்கே பிரச்னை வந்தாலும் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நாட்டாமை அமெரிக்கா என்று சிறப்புப் பெற்ற தேசத்தின் குடிமகன், இப்பிரபஞ்சத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு தனிமைப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விநோத தேசத்தில் அகதி அந்தஸ்து கோருகிறார் என்றால் நம்ப முடிகிறதா..?
Add Comment