இந்தியப் பழங்குடியினர் நலத்துறை ‘ஆதி வாணி’ என்ற பெயரில் ஒரு மொழிபெயர்ப்புச் செயலியை வெளியிட்டுள்ளது. முதல்முறையாக ஒரு ஏஐ சக்தியூட்டப்பட்ட செயலி, இந்தியப் பழங்குடி மொழிகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கிறது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், பழங்குடியினர் நலத்துறையின் இணையமைச்சர் துர்காதாஸ் ஊக்கி இந்தச் செயலியையும் இணையதளத்தையும் அறிமுகம் செய்தார்.
இந்தியாவில் 461 ஆதிவாசி மொழிகளும், அதில் 71 தனித்துவம் வாய்ந்த பழங்குடித் தாய்மொழிகளும் புழக்கத்தில் உள்ளன. இவற்றில் 81 மொழிகள் அழியக் கூடிய அபாயத்தில் இருக்கின்றன. இன்னும் 42 மொழிகள் கிட்டத்தட்ட அழியும் தறுவாயில் உள்ளன. இதற்கு முக்கியக் காரணம், தலைமுறைகளாக நடந்துவந்த இந்த மொழிகளின் பரிமாற்றம் கடந்த சில பத்தாண்டுகளாக மிகவும் குறைந்துவிட்டதுதான். அதோடு, இத்தகைய மொழிகளைப் பாதுகாத்துப் பராமரிக்கும் பணிகளும் அருகிவிட்டன.














Add Comment