பனாமா கால்வாய் விவகாரம், தேர்தல் பரப்புரைகளின் போதே சொன்னதுதான். சொன்னதைச் செய்வேன் செய்வதைத் தான் சொல்வேன் என்பதற்கு இலக்கணம் அதிபர் டிரம்ப். வால்ஸ்டிரீட் பத்திரிகையே சொல்கிறது இவர் ஒரு முரட்டுப் பிடிவாதக்கார, புரிதலும் பரிவும் இல்லாத அதிகாரம் கொண்ட அதிபர் என்று. ஒரு வாரத்தில் அமெரிக்காவே ஆட்டம் கண்டிருக்கிறது. பாதிப்படையப்போவதென்னவோ உலக நாடுகள்தாம்.
இப்போது ஆசைக்கார குழந்தைக்கு பனாமா வேண்டுமாம். அதென்ன பவர் ரேஞ்சர் பொம்மையா உடனே தர? இப்படித்தான் மகள் “I want a bag dad” என்றதைத் தவறாகப் புரிந்து கொண்டு பாக்தாதுடன் போருக்குப் போனார் இவருடைய சீனியர் என்ற ஒரு நகைச்சுவை உண்டு. அந்தக் கதையை விடுங்கள். பனாமாவுக்கு வருவோம்.
1584இல், ஸ்பானிஷ் அரசர்கள் பெருவில் இருந்து கடல் வழியாக ஸ்பெயினுக்குத் தங்கமும் வெள்ளியும் கொண்டுவரக் குறுக்கு வழியைக் கண்டுபிடிக்கப் போட்ட முதல் பிள்ளையார் சுழிதான் பனாமா கால்வாய் (panama canal). ஆனால் அப்போது அது கால்வாயாக வெட்டப்படவில்லை. ஒரு வழி. அவ்வளவே.
Add Comment