Home » வரிமகன்: டொனால்ட் டிரம்ப்பின் அட்டகாசங்கள்
உலகம்

வரிமகன்: டொனால்ட் டிரம்ப்பின் அட்டகாசங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘பரஸ்பர வரிக் கட்டணக் கொள்கையை’ உலகம் முழுவதும் செயல்படுத்தியுள்ளார். இந்தியா மீது 25% வர்த்தகக் கட்டணம் விதித்துள்ளார். அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு 29%இல் இருந்து 19%ஆகக் குறைத்துள்ளார். வரிக் கட்டணங்கள் வர்த்தகக் கொள்கை சார்ந்தவை மட்டுமல்ல. அவை இப்போது புவிசார் அரசியலின் புதிய ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

டிரம்ப் 65க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சமூக வலைத்தளம் மூலம் ‘கடிதங்கள்’ அனுப்பி அவர்களுடைய புதிய கட்டண விகிதங்களை அறிவித்தார். ’90 நாட்களில் 90 ஒப்பந்தங்கள்’ என்று பெருமையாகச் சொன்னார். ஆனால் நடைமுறையில் அந்த இலக்கு நிறைவேறவில்லை. அதன்பிறகு அவர் தனது அணுகுமுறையை மாற்றினார். அரசியல் அழுத்தத்தை அதிகரித்தார்.

டிரம்ப் இதுவரை சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென்கொரியா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தங்களை முடித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தொடக்கத்தில் அறிவித்த 30%இல் இருந்து 15% ஆகக் குறைத்தார். ஜப்பானுக்கு 24%இல் இருந்து 15% ஆகக் குறைத்தார். ஆனால் இந்தியாவுக்கு 25%ஐ மாற்றாமல் அப்படியே வைத்திருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!