தமிழ்நாடு அரசின் சார்பில் சிங்கப்பூரில் ஸ்டார்ட்அப் ஒருங்கிணைப்பு மையங்கள் திறக்கப்படவுள்ளன. சிங்கப்பூர் மீதான தமிழர்களின் ஆர்வம் உண்மையில் 1800 களிலேயே தொடங்கிவிட்டது. சிங்கப்பூர் தனி நாடக உருவான நாளிலிருந்து தமிழர்கள் அங்கு வசித்து வருகின்றனர். அதற்கு முன்னரும்தான். அந்நாட்டின் நான்கு அரசு அலுவல் மொழிகளில் தமிழும் ஒன்று.
கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்றே சென்னையில் அண்ணா சாலை, பெருங்குடி, டி.நகர் என அனைத்துப் பகுதிகளிலும் பெரிய நூலகங்கள் இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் ஒரு நூலகத்தில் எடுக்கும் புத்தகங்களை வேறு ஏதாவது நூலகத்தில் திருப்பிக் கொடுக்கலாம் என்னும் வசதி இருந்தால்? கூடவும், அனைத்தும் நூலகங்களும் மெட்ரோ வழித்தடத்தில் இணைக்கப்பட்டிருந்தால்? இந்த ஏற்பாடு உண்மையில் சிங்கப்பூரில் உள்ளது.
அங்கிருக்கும் தேசிய நூலக ஆணையம் சார்பில் சிங்கப்பூர் முழுவதும் 28 நூலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு உள்ள புத்தங்கங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதற்குச் செயலியும் உள்ளது. அங்கு பழம்பெரும் தமிழ் இலக்கியங்கள் முதல் இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கான நவீனத் தமிழ்ப் புத்தகங்கள் வரை அனைத்துமே உள்ளன. தமிழகத்தில் அரிதாகவே இருக்கும் அட்டை புத்தங்கள் கூட அங்கு அதிகமான அளவில் கிடைக்கின்றன.
Add Comment