வெளிநாட்டிலிருந்து வேலை வாய்ப்புகளுக்காக வருபவர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் எனக் கடந்த ஆண்டு மட்டும் 2.3 மில்லியன் விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது கனடா அரசு. வீட்டு வாடகையும், விலைவாசியும் அங்கு எப்போதுமில்லாத அளவிற்கு அதிகமாகியிருப்பதால் மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க, தற்காலிகக் குடியேறிகளின் வரவை குறைத்துக்கொண்டுள்ளது கனடா அரசு.
சென்ற ஆண்டு கணக்கின்படி, நான்கு கோடிக்கும் சற்றே அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. அதில், இரண்டரை லட்சம் பேர் தமிழர்கள். உலக அளவில் தாய்நாட்டுக்கு வெளியே அதிகத் தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் முக்கியமானது கனடா. பூமியின் எந்த மூலையில் மக்களுக்குப் பிரச்சினை என்றாலும் முதல் ஆளாக அவர்களை வரவேற்று வாழவைக்கும் நாடு கனடா.
இலங்கை போரின் போது அடைக்கலம் தேடி வந்த தமிழர்கள், தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள், மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களும் கனடாவில் உள்ளனர். 1983 ஆம் ஆண்டில் 150 தமிழர்களே அங்கு இருந்தனர். இன்று டொரொண்டோ நகரம்தான் தெற்காசியாவைத் தாண்டி அதிக அளவில் தமிழர்கள் வசிக்கும் பகுதி.
Add Comment