Home » இரு மொழிகள், ஒரு குடியுரிமை
தமிழர் உலகம்

இரு மொழிகள், ஒரு குடியுரிமை

இன்றைய வியட்நாமின் ஹோ சி மின் நகரம் வானுயர கட்டிடங்களால் ஆனது. சென்ற ஆண்டு கணக்குப்படி அந்நகரின் மக்கள் தொகை பத்து மில்லியன். 1880களில் பிரெஞ்சு கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இன்றைய லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் பகுதிகள் தான் இந்தோசீனா என்றறியப்பட்டன. அப்போது ஹோ சி மின் நகரத்தின் பெயர் சைகோன். அப்போது அங்கு பெருமளவில் இருந்த தமிழர்களின் வாழ்க்கைக்குச் சாட்சியாக இன்றும் இருக்கும் மாரியம்மன் கோவில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

பன்னிரண்டு மீட்டர் உயர ராஜ கோபுரம். கமேர் பூசாரி தினமும் ஆலயத்தைச் சுத்தப்படுத்தி பூஜைகளுக்கு ஆயத்தமாகும் வேளையில் அங்குள்ள சீன, வியட்நாம், மற்றும் கமேர் மக்கள் ஒன்றுகூடி வழிபாடுகளை மேற்கொள்வர். ஊதுபத்தி, வாசனை மலர்கள் மற்றும் நூடில்சை படையலாகக் கொண்டுவருவார்கள். அது வெறும் இந்தியர்களுக்கான கோயில் மட்டுமல்ல. அந்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு வழிப்பாட்டு தலம்.

இரு நாடுகளுக்கும் கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகள் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பல்லவர்களின் வம்சாவளி மன்னர் வியட்நாமில் ஆட்சி செய்து வந்ததும், கைமாறாக அந்த வம்சத்து இளவரசர்களை, அரசர்களாக இங்கே அழைத்து வந்ததாகக் கூறப்படும் கதைகளும் உண்டு. அதைத் தாண்டி இரு நாடுகளுக்கான தொடர் உறவு என்பது பிரஞ்சு காலனியக் காலத்தில் 1800களில் ஏற்பட்டது தான். பிரஞ்சுக்காரர்கள் இப்பகுதியைக் கட்டுப்பாட்டில் எடுக்கும்போது அங்கு தமிழ் குடியேற்றங்கள் எதுவும் இருக்கவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!