Home » துருக்கித் துறப்பு
இந்தியா

துருக்கித் துறப்பு

சமீபத்தில் இந்திய-பாகிஸ்தான் போர் அச்சுறுத்தல் பெருகியிருந்த நாள்களில் பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்ததைத் தொடர்ந்து இந்திய மக்கள் தன்னெழுச்சியாகத் துருக்கியைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பல்வேறு தீவிரவாத முகாம்களைத் தாக்கியது இந்தியா. இந்தத் தாக்குதலைத் துருக்கி நேரடியாக விமரிசித்திருந்தது. அதோடு, பாகிஸ்தானுக்கு ஆயுதம் தாங்கிய ட்ரோன்களைத் துருக்கி வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகின.

மட்டுமல்லாமல், இந்தியாவின் தாக்குதலுக்கு முன்பாகவே துருக்கி தன்னுடைய போர்க்கப்பலைக் கராச்சி துறைமுகத்துக்கு அனுப்பியிருந்தது. நல்லெண்ணத்தின் அடிப்படையில் அப்படிச் செய்ததாக அது சொன்னது. தாக்குதலுக்குப் பிறகு, துருக்கியின் போர் விமானமொன்று பாகிஸ்தானில் தரையிறங்கியது. இது, எரிபொருள் நிரப்ப என்று காரணம் சொல்லப்பட்டது.

துருக்கியைத் தொடர்ந்து அஜர்பைஜானும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இவ்விரு நாடுகளுடனும் இந்தியா சிறப்பான வர்த்தக உறவைக்கொண்டிருக்கிறது. இவ்விரு நாடுகளுக்கும் இந்தியர்கள் அதிக அளவில் சுற்றுலாவுக்குச் செல்கிறார்கள். இந்நாடுகளின் வருவாயில் பெரும்பங்கு சுற்றுலாவிலிருந்து வருகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!