எகிப்தில் மன்னர் துட்டன்காமன் (Tutankhamun) குறித்த அரிய பொக்கிஷங்கள் கொண்ட மாபெரும் அருங்காட்சியகம், இருபத்து இரண்டு ஆண்டுகாலப் பணிகளுக்குப் பிறகு இந்த மாதம் திறக்கப்பட்டிருக்கிறது. ஒரு மன்னருக்காகத் தனி அருங்காட்சியகம் அமைக்கும் அளவுக்கு அவருக்கென்ன முக்கியத்துவம்? யார் இந்த துட்டன்காமன்? அந்த அருங்காட்சியகத்தில் என்னென்ன பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன?
உலகின் மிக நீண்ட, நிலையான நாகரிகங்களில் ஒன்று எகிப்து நாகரிகம். நைல் நதிக்கரையில் பிறந்து வளர்ந்தது. பண்டைய எகிப்து நாகரிகத்தை மூன்று முக்கியக் காலங்களாகப் பிரிக்கலாம். கிமு 2686-2181க்கு இடைப்பட்ட காலம் ‘பழங்காலப் பேரரசு’ என்று அழைக்கப்படுகிறது (Old Kingdom). பிரமிட் போன்ற பிரம்மாண்டமான கட்டடக்கலைக்கான அடித்தளம் இந்தக் காலகட்டத்தில்தான் அமைக்கப்பட்டது. பிரமிடுகளைக் கட்டிய பாரோக்களின் அதிகாரம் உச்சத்தில் இருந்தது.
பண்டைய எகிப்தில் பாரோ (Pharaoh) என்பது எகிப்தின் அரசரைக் குறிக்கும் பட்டப்பெயர். இந்தச் சொல் எகிப்திய மொழியில் ‘per-aa’ என்பதிலிருந்து வந்தது, இதன் பொருள் ‘பெரிய வீடு’ அல்லது ‘அரண்மனை’. காலப்போக்கில் இது அரண்மனையில் வாழும் அரசரைக் குறிக்கும் பட்டமாக மாறியது. பாரோக்கள் வெறும் அரசர்கள் மட்டுமல்ல, அவர்கள் கடவுள் மனிதர்களாகக் கருதப்பட்டனர். எகிப்தியர்கள் பாரோவை பூமியில் வாழும் கடவுளான ஹோரஸின் (Horus) உருவமாகவும், இறந்த பின் ஒசைரிஸ் (Osairis) ஆக மாறுபவராகவும் நம்பினர்.















என்னோடு பணிபுரியும் எகிப்து நண்பர்களிடம் கேட்டேன் துட் அன் ஹாமுன் பற்றி வியக்கும்படி சொன்னார்கள். அவரது கோல்டன் மாஸ்க் பற்றியும் சொன்னார்கள். கட்டூரைக்கு மிக்க நன்றி.
துட்டன்காமன் என்பது சரியான சொற்பிரயோகம் அல்ல, ஆங்கிலத்திற்கு மாறி பிறகு தமிழ் படுத்தும் போது முற்றிலும் வேறு ஒன்றாக போய் விடுகிறது.